இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சிறப்பு நிலை அதிகாரி பணி வாய்ப்பு!

Rate this post

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஐ.ஓ.பி., என்ற இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்னையை தலைமையகமாக கொண்டு இயங்குகிறது. இதில் சிறப்பு நிலை அதிகாரிகள் பிரிவில் காலியாக உள்ள 20 இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவுகள்: இன்பர்மேஷன் செக்யூரிடி மற்றும் ஐ.எஸ்., ஆடிட் ஆகிய பிரிவுகளின் கீழ், இந்த அதிகாரிகள் பதவி காலியாக உள்ளது.

வயது: விண்ணப்பதாரர்கள் 25 – 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஐ.டி., செக்யூரிட்டி ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பட்டப்படிப்பு அல்லது முதுநிலை பட்ட படிப்பை கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, ஐ.டி., எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், ஐ.டி.,-செக்யூரிட்டி, சைபர் செக்யூரிட்டி ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முடித்திருக்க வேண்டும். சைபர் செக்யூரிட்டி ஆபரேஷன்ஸ் பிரிவில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை உள்ளது. ஐ.எஸ்., ஆடிட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் மேற்கண்ட அதே பிரிவு ஒன்றில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். தகவல்களை இணையதளத்தில் அறியவும்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் முறையிலான எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

கடைசி நாள்: 2018 ஆக., 4.

விபரங்களுக்கு: www.iob.in/upload/CEDocuments/Amendment-RECRUITMENT-IS-AUDIT.pdf

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*