வேலை வாய்ப்பு

இந்தியன் வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பணி வாய்ப்பு!

பொதுத்துறை வங்கிகளில், தமிழகத்தின் சென்னையை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் இந்தியன் வங்கி, அனைவரும் அறிந்ததே. பல்வேறு சிறப்புகளுடன் இயங்கி வரும் இவ்வங்கியில் காலியாக உள்ள 417 புரொபேஷனரி அதிகாரிகளை பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது: விண்ணப்ப தாரர்கள் 20 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் முறையிலான எழுத்துத் தேர்வு பிரிலிமினரி மற்றும் மெயின் என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். இவற்றில் வெற்றி பெறுபவர்கள் நேர்காணலை எதிர்கொண்டு அதிலும் வெற்றி பெற்று பணியில் சேர வேண்டும்.

தேர்வு மையங்கள்: இந்தியன் வங்கியின் எழுத்துத் தேர்வு தமிழகத்தின் சென்னை, மதுரை, கோவை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மையங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்
 ரூ. 600. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

கடைசி நாள்: 2018 ஆக., 27.

விபரங்களுக்குwww.indianbank.in/career.php

Comment here