Sliderஅரசியல்

இந்தியாவின் தகவல் தொழில் நுட்ப தலைநகரமாக – சென்னை

Rate this post

இந்தியாவின் தகவல் தொழில் நுட்ப தலைநகரமாக மாறுகிறது சென்னை – முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தகவல்

சென்னை மணப்பாக்கத்தில் தமிழக அரசு மற்றும் இந்தியதொழில் கூட்டமைப்பு சார்பில் கனெக்ட் -18 மாநாடு நடைபெற்றது மாநாட்டில் கலந்து கொண்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது

:    நாட்டின் வளர்ச்சியை அளவிடக்கூடிய வகையில் அமைந்திருப்பது தகவல் தொழில் நுட்பமாகும்.  தமிழ் நாட்டை பொருத்தவரை பல லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்பு முடித்து வெளியில் வருகின்றனர். தமிழகத்தின் மென் பொருள் ஏற்றுமதி இந்த ஆண்டு 1.11 லட்சம் கோடியாக உள்ளது. மென்பொருள் வல்லுனர்களின்  எண்ணிக்கை 6.3 லட்சமாக உள்ளது.  தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேலும் அதிகரிக்க அடுத்த ஆண்டு ஜனவரியில் இரண்டவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.  இதில்  பல சர்வதேச நிறுவனங்கள், தொழில் முதலீடு செய்ய முன்வர உள்ளனர்.  சென்னை,  இந்தியாவின் தகவல் தொழில் நுட்ப துறை தலை நகரமாக விளங்கும் வகையில், பல புதிய தகவல் தொழில் நிறுவனங்ள் துவங்கப்பட்டு வருகின்றன. நவீன தொழில்நுட்ப தேவைகளை நிறைவேற்றும் அளவில், மனிதவள ஆற்றல் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது என்று பேசினார்.  நிகழ்ச்சியில்  “ தமிழகத்தில் மின்னாளுமை `என்ற நூல் வெளியிடப்பட்ட்து. நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் காமராஜ், எம்.சி.சம்பத்,தகவல் தொழில் நுட்ப துறை செயலர் சந்தோஷ் பாபு, சி.ஐ.ஐ. தமிழக தலைவர் பொன்னுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comment here