அரசியல்இந்தியாசினிமாதொழில்பொது

இந்தியாவில் கஞ்சா விற்பனை சட்டபூர்வமாக்க வேண்டும் : பாலிவுட் நடிகர் கோரிக்கை

இந்தியாவில் கஞ்சா விற்பனையை சட்டபூர்வமாக்க வேண்டும் என பாலிவுட் நடிகர் உதய் சோப்ரா டிவிட்டரில் தெரிவித்துள்ளார். பாலிவுட் பிரபல நடிகர் உதய் சோப்ரா. இவர், தூம், நீல் அண்ட் நிக்கி, பியார் இம்பாசிபிள் போன்ற திரைப்படங்களை நடித்து புகழ் பெற்றவர். உதய் சமீபத்தில் டிவிட்டர் பதிவு ஒன்றில் சர்ச்சையை கிளப்பியுள்ளார். அதாவது, உதய் தனது பதிவில், இந்தியாவில் கஞ்சா விற்பனையை சட்டபூர்வமாக்க வேண்டும். இது நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதி. இதனை சட்டபூர்வமாக்கினால் அரசுக்கு நல்ல வருவாய் கிடைப்பதுடன், கஞ்சா சம்பந்தப்பட்ட குற்றச் செயல்களை முழுவதுமாக ஒழிக்க முடியும் என குறிப்பிட்டிருந்தார். இவரின் இப்பதிவு பலரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Comment here