பிரத்யகம்பொது

இந்தியாவில் நீண்ட நாள் பணவீக்கம்: ரகுராம் ராஜன்

இந்தியாவில் பல ஆண்டுகளாக அதிக பணவீக்கம் உள்ளது என ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறினார்.

மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் பேசியதாவது: வளர்ச்சிக்காக பணவீக்கத்தை கைவிடக்கூடாது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி கவனம் தரும். விலைவாசியை கட்டுப்படுத்தும் ரிசர்வ் வங்கி கொள்கையால் மக்கள் பலன் பெற்றுள்ளனர். நாட்டின் நிதிக்கொள்கையால் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை வளர்ந்துள்ளது.பண கொள்கை தொடர்பாக அமைக்கப்பட்ட குழு, பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஒரு புரட்சியாகும். குறைந்த பணவீக்கத்தை கவனத்தில் கொண்டு, ஏழை மக்களுக்கு பயனளிக்கும் பழைய முறையை கைவிட்டுள்ளோம். குறைந்த பண வீக்கம் குறைந்த வட்டிவிகிதத்தை ஒருவர் வைத்திருக்க முடியாது. எதிர்காலத்தில் குறைந்த பணவீக்கத்தை கொண்டு வர அரசும் புதிய கவர்னரும் நடவடிக்கை எடுப்பர் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த பல வருடங்களாக இந்தியாவில் உயர்ந்த பணவீக்கம் உள்ளது எனக்கூறினார்.

Comment here