Sliderஅரசியல்இந்தியாதமிழகம்புதுச்சேரிபொதுமாவட்டம்

இந்தியாவில் 70 ஆண்டுகள் இல்லாத பொருளாதார வீழ்ச்சி : மோடி மீது ராகுல் தாக்கு

Rate this post

இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகள் இல்லாத அளவில் பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால், பல்வேறு மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: நாட்டு மக்கள் சோர்ந்து போய் இருக்கும் போது பிரதமர் மோடி உற்சாகமாகப் பேசுகிறார். சாமானிய மக்களின் பிரச்சினைகளைப் பற்றியும், பற்றியும் எரியும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்தும் ஒரு வார்த்தைகூட பிரதமர் மோடி பேசவில்லை. பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின் போது அளித்த வாக்குறுதியில் எதையும் நிறைவேற்றவில்லை. கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பொருளாதார வீழ்ச்சியையும், விவசாயிகள் பிரச்சினையும், ஒட்டுண்ணி முதலாளித்துவத்தையும், ஊழலையும் இந்த 4 ஆண்டுகளில் மக்கள் பார்த்துவிட்டார்கள். டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 70 ஆண்டுகளில் இதுபோல் வீழ்ச்சி அடைந்தது இல்லை. பெட்ரோல் இன்று 80 ரூபாய்க்கு அதிகமாகவும், டீசல் 80 ரூபாயையும் எட்டிவிட்டது. விலை உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பும் போது, மோடி அமைதியாக இருக்கிறார். சமையல் எரிவாயு 800 ரூபாய் உயர்ந்துவிட்டது. விவசாயிகள் தற்கொலை அதிகரித்துவிட்டது. பாஜக எம்எல்ஏக்கள் பலாத்காரக் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால், எதற்கும் பிரதமர் மோடி வாய்திறந்து ஒருவார்த்தைகூடப் பேச மறுக்கிறார். நாடாளுமன்றத்தில் ரபேல் போர் விமானம் குறித்து கேள்வி எழுப்பினால் கூட மோடி பதில் அளிப்பதில்லை. நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளால் சோர்வடைந்து இருக்கும் போது, மோடி மக்களிடம் உற்சாகமாக உரையாற்றுகிறார் என்றார்.

Comment here