விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி : ஆஸ்திரேலியாவுக்கு 359 ரன்கள் இலக்கு

Rate this post
மொகாலி : இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் 2 ஆட்டங்களில் இந்தியாவும், 3–வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. தொடரில் இந்தியா 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4–வது ஒரு நாள் போட்டி மொகாலியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை)  தொடங்கியது.
இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய அணியை பந்து வீசுமாறு பணித்தார். இதன்படி முதலில்  பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 143 ரன்களும் , ரோகித் சர்மா 95 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்களும், ஜெய ரிச்சர்டுசன் 3 விக்கெட்களும் விழ்த்தினர்.
இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி 359 ரன்கள் இலக்குடன் களமிறங்க உள்ளது.

Comment here