உலகம்

இந்தியாவை பின்பற்ற வேண்டாம்: அமெரிக்க எம்.பி., கருத்து

வாஷிங்டன்:
“இந்திய பார்லிமென்டில் எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபடுவதை அமெரிக்க எம்.பி.,க்கள் பின்பற்ற வேண்டாம்” என அமெரிக்க எம்.பி., மார்க் மிடோஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாண எம்.பி.,யாக இருப்பவர் மார்க் மிடோஸ். இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் நமது ராஜ்யசபாவில் அ.தி.மு.க., எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்ட புகைப்படம் மற்றும் அமெரிக்க பார்லிமென்டில் அமளியில் ஈடுபட்ட எம்.பி.க்களின் புகைப்படம் ஆகிய இரண்டையும் சேர்த்து செய்தி ஒன்றை பதிவிட்டு உள்ளார்.
அந்த செய்தியில் “நமது நாடு ஜனநாயகத்திற்கு சிறந்த உதாரணமாக உள்ளது. பிற நாட்டு பார்லிமெண்ட்களில் எம்.பி.க்கள் கூச்சல் குழப்பம் செய்து அமளியில் ஈடுபடுகின்றனர். அவர்களை நமது எம்.பி.,க்கள் பின்பற்ற கூடாது” என பதிவிட்டு இருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க பார்லிமென்ட் சபாநாயகர் “மார்க் இதை விளம்பரம் தேடி கொள்வதற்கு செய்துள்ளார்” என கூறினார்.

Comment here