விளையாட்டு

இந்தியா – ஆஸ்திரேலியா 20 ஓவர் போட்டி டிக்கெட் வாங்குவதில் தள்ளுமுள்ளு – 20க்கும் மேற்பட்டோர் காயம்

Rate this post

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது டி20 போட்டி ஐதராபாத்தில் வரும் 25ம் தேதி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடக்க உள்ளது.

இப்போட்டியை காண டிக்கெட் விற்பனை ஜிம்கானா மைதானத்தில் வழங்கப்பட்டது. இதனையடுத்து இப்போட்டியை காண டிக்கெட் வாங்குவதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர். இதனால், அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

20க்கும் மேற்பட்டோர் காயம்

இதையடுத்து ரசிகர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் காயமடைந்தனர், மேலும் ஒரு பெண்ணின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவத்தில் 5 பெண்கள் உள்பட 15 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Comment here