Sliderஉலகம்

இந்தியா சீனா உறவு ?

Rate this post

 

*இந்தியாவும் சீனாவும் சிறந்த நண்பர்களாகவும், உறவினர்களாகவும் இருக்க முடியும்* : சீன அதிபர் ஜி ஜிங்பிங்

முன்னெல்லாம், இந்திய ஜனாதிபதியோ, பிரதமரோ அரசு முறை பயணமா சீனாவுக்கு போனா…, திருப்பதி கோவில் பெருமாள் தரிசனம் மாதிரி, “போனா போகட்டும்… அவ்ளோ தூரத்துலிருந்து வந்துட்டான்” னு பரிதாபப்பட்டு, *பத்தே பத்து நிமிஷம் சீன அதிபர் தரிசனம் குடுப்பாரு.* இருநாட்டு தலைவர்களோட…, கூட்டு பொறியல் அறிக்கை எல்லாம் கிடையாது.

சங்கி மங்கின்னு எவனாவது, சீன வெளியுறவு செயலரோட ஒன்னுவிட்ட சின்னாத்தா மவன்தான், “இந்தியாவுடன் நட்புறவை விரும்புகிறோம்” ன்னு, சர்வதேச மீடியா வுக்காக… வழக்கமான ஒரு பேட்டிய குடுத்துட்டு, “அவிங்களுக்கு டீ-யக் குடுத்து பத்தி விடுங்கடா” னுட்டு போயிடுவான்.

நம்மாளுங்க, சீன கிரீன் டீ நாலு பாக்கெட் வாங்கி பேக்ல சொருவிட்டு, யுனான் மாகாண மேம்பாலத்துல சறுக்கி விளையாண்ட்டு, மஞ்சள் நதிக்கு குறுக்கால கட்டுன அணக்கட்டு மேல, பொண்டாட்டியோட நின்னு போட்டோ புடுச்சுட்டு … ஊரு வந்து சேருவாங்க.

*ஆனா இன்னைக்கு* …
* இந்திய ராணுவம் டோக்லாம்ல 72 நாட்கள் பிடிவாதமா பட்டறை போட்டது,

* அருணாச்சல் விமானப்படை சீரமைப்பு,

* எல்லைல மிகப்பெரிய விமானப் படை போர் பயிற்சி,

* திபெத்தை நோக்கி நிறுத்தப் பட்டிருக்கும்… நூறு T90 டாங்ஸ் & பிரம்மோஸ் மிஸைல்ஸ்,

* சீனாவின் எதிரிகளான… வியட்நாம் & தைவானுக்கு பிரம்மோஸ் ஏவுகணைகள் விற்பனை,

* சீன மிரட்டலுக்கு பயந்து மன்மோகன் ஆட்சியில் பின்வாங்கிய, வியட்நாம் எண்ணெய் துரப்பன பணியை மீண்டும் தொடங்கியது,

* தென்சீன கடல் பகுதியில் இந்திய போர் கப்பல்களை நிறுத்தியது,

* இந்தியாவை சுற்றி சீனா கோர்த்த, ‘முத்து மாலை’ திட்டத்தை அறுத்தெறிந்தது, சாபகார் போர்ட் நிறுவியது,

* சீனாவுக்கு கொடுக்க இருந்த புல்லட் ரயில் திட்டத்தை ஜப்பானுக்கு மாற்றியது,

* இந்திய சீன பிரச்சனயில், சித்தாந்த ரீதியில் சீனாவை ஆதரிக்கும் ரஷ்யாவை, பிரச்சனையில் இருந்து விலகி நிற்க வைத்தது,

* எந்த காலத்திலும் இல்லாமல் இப்போது… அமெரிக்க, இந்திய, ஜப்பான் நாடுகளின் கூட்டமைப்பு & கடற்படைகளின் கூட்டு போர் பயிற்சி. இதில் ஆஸ்திரேலியாவும் இணையப் போகிறது.

* *மிக முக்கியமாக, பாஸ்வேர்ட் போட்டு LOG IN குடுத்த… அடுத்த இருபது நிமிடங்களில், சீனாவின் கிழக்கு எல்லைவரை நலம் விசாரிக்கும், ‘அக்னி’ குடும்பத்து ஏவுகணைகள்.*

*மோடி* பாஸ்வேர்ட் போட்டு *LOG IN குடுக்க தயங்காத ஆள் என்பதும் சீனாவுக்கு தெரியும்.* உலக அரசியல் மாறிக் கொண்டிருப்பதையும், அது… *இனி இந்தியாவை சுற்றியே சுழலும் என்பதையும் சீனா நன்றாக உணர்ந்து விட்டது.*

மேலும் ஒரு முக்கிய தகவல், *சீன வரலாற்றுலேயே முதன் முறையாக சீன அதிபர் ஒருவர், ஒரு வெளிநாட்டு தலைவருக்காக அவருடன் இரண்டுநாள் முழுவதும் செலவிட்டது.*

அமெரிக்க அதிபருக்கே அந்த மரியாதைக்கு கொடுக்கப்படவில்லை என்பது கூடுதல் தகவல்.

பலமான ஒருவனால் மட்டுமே இது சாத்தியம். # *மோடி என்ற #தேச_பக்தரின் உழைப்பால் மட்டுமே,* உலக அரங்கில்… நம் நாட்டிற்கு இந்த மிகப்பெரிய கௌரவம் கிடைத்திருக்கிறது !!! 🇮

💪🙏🇮🇳🙏

Comment here