விளையாட்டு

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு கொரோனா – ரசிகர்கள் அதிர்ச்சி

Rate this post

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 ஓவர் போட்டி வரும் 20-ம் தேதி மொகாலியில் நடைபெற உள்ளது.

முகமது ஷமிக்கு கொரோனா

இந்நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஷமி விளையாட மாட்டார் என பிசிசிஐ தெரிவித்திருக்கிறது.

மேலும், ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட உள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்து முகமது ஷமி விலகியுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

உமேஷ் யாதவ் தற்போது 2 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் டி20ஐ விளையாடுவதற்கான அணியில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment here