அரசியல்இந்தியாதொழில்நுட்பம்பொது

இந்திய எல்லையில் லேசர் வேலி : மத்திய அமைச்சகம் தகவல்

இந்திய எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன வேலிகள் அமைக்க உள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

இந்திய எல்லைப் பகுதிகளுக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஊடுருவல் களைத் தடுப்பதற்காக எல்லைப் பகுதிகளில் முள் வேலிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும், தீவிரவாதிகள் எளிதில் கடந்து விடுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்திய, பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவல்களைத் தடுப்பது என்பது ராணுவத்தினருக்கும், எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும் பெரும் சவாலாக உள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு, மத்திய அரசு கடந்த 2014ம் ஆண்டு இந்திய, பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன வேலிகளை அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்நிலையில், இந்த வேலிகளை பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பொருத்தும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. இந்த நவீன வேலிகளில் லேசர் ஒளிக் கீற்றுகள், சென்சார்கள், சிசிடிவி கேமராக்கள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. எனவே, இந்த வேலிகளைக் கடக்க யாரே னும் முற்பட்டால் உடனடியாக பிஎஸ்எப் மற்றும் ராணுவத் தலைமையகங்களில் அலாரம் மூலமாக எச்சரிக்கை விடுக்கப்படும். இதன் மூலமாக, ஊடுருவல் களை எளிதில் முறியடிக்க முடியும் என பிஎஸ்எப் இயக்குநர் கே.கே. சர்மா தெரிவித்தார்.

Comment here