விளையாட்டு

இந்திய பேட்டிங் வரிசைக்குள் ஊடுருவியது விரும்பத்தக்கதாக இருந்தது, மிடில் ஆர்டரைப் பார்த்தோம்: ஆட்ட நாயகன் ட்ரெண்ட் போல்ட்

Rate this post

சரியான பிட்ச் கிடைத்தால் இந்திய அணியின் பலவீனங்களை சிறந்த வீச்சாளர்கள் சுலபத்தில் பட்டவர்த்தனமாக்கி விடுவார்கள் என்பதற்கு இன்றைய ஹாமில்டன் ஒருநாள் போட்டி உதாரணம். ஸ்விங் எடுக்கும் பிட்சில் ட்ரெண்ட் போல்ட் (5/21)  இந்திய அணியை 92 ரன்களுக்குச் சுருட்டி 8 விக்கெட்டுகளில் நியூஸி. வெற்றி பெற காரணமாக இருந்தார்.

இந்நிலையில் பிற்பாடு செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரெண்ட் போல்ட் கூறியதாவது:

தொடரை ஆரம்பித்த விதம் வெறுப்பூட்டக் கூடியதாக, ஏமாற்றமளிப்பதாக அமைந்தது. எங்களிடம் திறமைகள் தேவையான் அளவு இருக்கின்றன என்பதைக் காட்டும் தினமாக இன்று அமைந்தது திருப்திகரமாக உள்ளது.

தொடக்க வீச்சாளராக நான் பந்து வீச்சை முன்னிலையில் நடத்திச் செல்ல வேண்டும், பேட்ஸ்மென்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும். பீல்டிங்கில் முனைப்புடன் செயல்பட முடிவெடுத்தோம். எனவே ஒரு வெற்றியை ஈட்டியது திருப்திகரமான வெற்றியாக அமைந்தது. மிகவும் விரைவாக ஆட்டம் திருப்பப்பட்டுள்ளது.

நிச்சயமாக விராட் கோலி போன்ற கிளாஸ் பிளேயர் அவர்களிடத்தில் இன்று இல்லை. எங்களிடம் ஆட்டத்திற்கான திட்டமிருந்தது, அதனை சிறப்பாக செயல்படுத்தினோம்.

பந்துகள் ஸ்விங் ஆகின, என்னுடைய ரிதமும் நன்றாக அமைந்தது. பிற்பாடு போடும்போது கூட பந்துகள் ஸ்விங் ஆகின. ஆகவே அதனை முழுமையாகப் பயன்படுத்தினோம்.

பந்துகள் ஸ்விங் ஆகும்போது நமக்கு பலவிதங்களில் அவுட் செய்ய முடிகிறது, பவுல்டு, எல்.பி.டபிள்யூ, என்று வாய்ப்புகள் கூடுகிறது.  இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்குள் ஊடுருவியது விரும்பத்தக்கதாக அமைந்தது,  முதல் முறையாக இன்று இந்திய மிடில் ஆர்டரைப் பார்த்தோம், ஆகவேதான் எங்கள் வெற்றி திருப்திகரமான வெற்றியாகும்.

இவ்வாறு கூறினார் ட்ரெண்ட் போல்ட்.

Comment here