இந்திய பொருளாதாரத்தை பாதிக்க, தேச விரோத சக்திகளின் திட்டமாகவே, தெரிகிறது!

Rate this post

தமிழக மக்களே!..
சற்றுநிதானமாக பதிவை கவனமாக படித்து உண்மையை அறிந்து கொள்ளுங்கள்!…

சீனா — 32 லட்சம் டன்.

சிலி — 13.4 லட்சம் டன்.

ஜப்பான் — 13 லட்சம் டன்.

இந்தியா — 6.8 லட்சம் டன்.

அமேரிக்கா — 4.8 லட்சம் டன்.

ரஷ்யா — 6 லட்சம் டன்.

ஸாம்பியா — 5.5 லட்சம் டன்.

தென் கொரியா — 4.7 லட்சம் டன்.

போலந்து — 4.5 லட்சம் டன்.

ஆஸ்திரேலியா — 4.2 லட்சம் டன்.

ஜெர்மனி — 3.4 லட்சம் டன்.

இது உலக நாடுகளில் தாமிர உற்பத்தி அளவு வரிசையில் முதலாவதாக உள்ள நாடுகள் பட்டியல்!.

      - 2012 புள்ளி விவரப்படி!

நான் மேலே கொடுத்துள்ள பட்டியல், பொதுவெளியில் உள்ளதுதான்!..

 யார் வேண்டுமானாலும் List of countries by copper smelter production என்று கூகிளில் தேடி, தெரிந்து கொள்ளலாம்!..

இதில் முக்கியமாக கவனித்தால்,… பொருளாதாரத்தில் மிகவும் முன்னேறிய நாடுகளில் பெரும்பாலானவையும், தங்கள் நாட்டிலேயே காப்பர் தயாரிப்பை, வைத்துக்கொண்டிருப்பதுதான்!..

 அளவு மட்டுமே வித்தியாசம்.!!!

காரணம், தாமிரம் இல்லாமல், அணுவும் அசையாது, இன்றைய நிலையில்!.

இது மிகைப்படுத்தல் அல்ல!.. விவரமானவர்களிடம் இது பற்றி கேட்டு தெரிந்து கொள்ளலாம்.!..

இந்த உலோகத்துக்கு வெளி நாடுகளை மட்டுமே நம்பினால், பொருளாதாரத்தை சுலபமாக  திட்டமிட முடியாது!.

அந்த அளவுக்கு மிக முக்கியமான உலோகம் இது!.

மின்னணு உபகரணங்களில், வாகனங்களில், பாட்டரிகளில், மின்கடத்தி வயர்களில், செல்போன்களில், ஏசி, பிரிட்ஜ், மைக்ரோவேவ், டீவீ, என தாமிர உபயோகம் இல்லாத தொழில்நுட்ப இடமே இல்லை, என்று சொல்லலாம்!.

பதிவு அது பற்றி அல்ல!..

மேற்கண்ட நாடுகளில், மிகவும் வளர்ந்த நாடுகளில், தனி மனித உயிருக்கு மிகுந்த, முக்கியத்துவம் தரும்.

சமூகம் அவர்களது ஓரிரு மரணங்களை நாட்டை ஸ்தம்பிக்க வைத்து விடும் அளவிற்க்கு செல்வார்கள்!.

அப்படிப்பட்ட நாடுகளில், இம்மாதிரி தாமிர ஆலைகளை, சுற்றுச்சூழலுக்கும், மனிதர்களுக்கும், துளிக்கூட பாதிப்பு ஏற்படா வண்ணம் இயக்குவது எப்படி, என்று தெளிவான தொழில்நுட்பம் நடைமுறையில் உள்ளது!…

நாமும் அதுபோன்ற பாதுகாப்பு நமது தூத்துகுடி ஸ்டெரிலைட் ஆலையில் ஏற்படுத்த பட்டுள்ளதா என்பதை தாராளமாக ஆராயலாம்!.

குறைபாடுகள் இருந்தால் வீரியமாக போராடலாம் தவறேதுமில்லை!.

அதனால், முதலில், ஸ்டெர்லைட் தாமிர ஆலை என்றாலே, என்னவோ உயிர்க்கொல்லி என்பது போன்ற, விஷம பிரச்சாரம் உண்மைக்கு புறம்பானது, என்று ஒவ்வொரு சாமானியரும் உணர வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலை யால், தூத்துக்குடியில் மாசு உண்டாவதாக உணரும்பொழுது, அதை சரி செய்வதை நோக்கியே, அவன் போராட்டம் – அமைதியாக, ஆனால் அழுத்தமாக – இருந்திருக்க வேண்டும்!.

தற்போது ஆலை சுமார் ஆறுமாதங்களக மூடப்பட்டும் காற்றுமாசுவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லையே!…

விஞ்ஞானத்தை நாம் ஏற்க வேண்டும்!.

ஆனால், நடப்பது என்ன?…

முழுக்க முழுக்க, பொய் பிரச்சாரம்!.

உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பும் வேகத்தை காணும்பொழுது, இது இந்திய பொருளாதாரத்தை பாதிக்க, தேச விரோத சக்திகளின் திட்டமாகவே, தெரிகிறது!.

தனிமனித உயிரின் மீது,.. ஒரு ஜப்பான்காரனுக்கும், ஆஸ்திரேலியாக்காரனுக்கும், அமெரிக்காக்காரனுக்கும், இல்லாத அக்கறையா???…

தூத்துகுடி மக்கள் மீது இந்த கலவரத்தை தூண்டி விடும் சிலகட்சிகளும், அமைப்புகளும் நினைத்தால் ரணகளத்திலும், வேதனை மட்டுமே வருகிறது!.

  சரி!...

இவ்வளவு வன்முறைக்கு தயாரான சக்திகள், உண்மையிலேயே தூத்துக்குடி மக்கள் மீது அக்கரையில் இருந்தால்!..

அந்த தொழிற்சாலை நிர்வாகம்!.

ஊர் மக்களுக்கு எங்கள் ஆலைக் கதவு திறந்தே உள்ளது!.

நாங்கள் அமைத்துள்ள மாசுக்கட்டுப்பாடு தொழில்நுட்பத்தை வந்து நேரில் பார்த்து, கேட்டு, புரிந்து கொள்ளலாம்.

என்று, தேசிய தினசரிகளில் கூட பேட்டி தந்துள்ளார்களே!..

இதே ஊடகங்களின் காமிராக்காரர்கள், மற்றும் நிருபர்களை அழைத்துக் கொண்டு, நேரே தொழிற்சாலைக்கு சென்று, சுற்றிப் பார்த்து, கேள்வி கேட்டு, அதில் திருப்தி இல்லையெனில், அனைத்தையும், செய்திகளில் வெளியிடலாமே!....

ஏன் அப்படி செய்ய ஆலையை எதிர்க்கும் கட்சிகளும்,அமைப்புகளும் முன்வரவில்லை!.

அவர்களிடம் உண்மை இல்லை!.

ஆலையையே மூடி வைத்துள்ள பல ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளவர்கள், நிச்சயம் அந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொள்வார்களே!..

 முயன்றார்களா?..

    இல்லையே!...

ஊடகங்கள், எதுஎதுக்கோ "பொறிவைத்து பிடிக்கும்" வேலைகளை செய்கிறார்களே?...

  இந்த ஆலையில்,  நிர்வாகம் பொய் சொல்வதாக இருந்தால்,  பொதுமக்கள் போர்வையில், உள்ளே சென்று, உண்மை நிலவரத்தை, வெடிக்கும் செய்தியாக வெளியிட்டு, அம்பலப்படுத்தலாமே?....

ஏன் செய்யவில்லை?.

துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன், எடுத்திருக்க வேண்டிய ஒவ்வொரு அடுத்த கட்ட நடவடிக்கைகளை பற்றியும், விதிமுறைகளை, அரசுக்கும், போலீசுக்கும், கலவரத்தை கண்டிக்கும் நடுநிலையானவர்களுக்கும், பாடம் எடுக்கும், அந்த நல்ல எண்ணம் உள்ளவர்கள்

ஒட்டுமொத்தமாக ஆலையை மூடவேண்டும் என்று கேட்பதற்கு முன், நியாயமாக எடுத்திருக்க வேண்டிய, பொதுநல செயல்பாடுகள் அல்லவா அவைகள்?…

 செய்தார்களா???...

ஏன் செய்யவில்லை?.
ஆலை பொய் சொல்லியிருந்தால், சுலபமாக ஆவணப்படுத்தியிருக்கலாமே?…

அனைத்து பொது மக்களும் கூட, அவர்கள் பக்கம் நின்று, ஆலையின் போக்குக்கு எதிராக குரல் கொடுத்திருப்பார்களே!..

தெளிவாய் புரிவது ஒன்றுதான்!.

அப்பாவிகளை மக்களை கேடயமாக பயன்படுத்தி, தேசவிரோத சக்திகளின் ஏமாற்றுவேலைதான் இது!...

 ஏமாந்தீர்கள் இளைஞர்களே!..

அப்பாவி பொதுமக்களே!…
கா.செல்வராஜ்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*