அரசியல்இந்தியாஉலகம்தமிழகம்தொழில்புதுச்சேரிபொது

இந்திய ரூபாய் மதிப்பு 72.91 பைசாவாக கடும் வீழ்ச்சி : பொருளாதார வல்லுநர்கள் அதிர்ச்சி

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றியில் இல்லாத அளவுக்கு 1 டாலருக்கு 72.91 பைசாவாக கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

உலக அளவில் டாலருக்கு நிகரான பணம் மதிப்பில் பல்வேறு நாணயங்களும் சரிவினை கண்டுள்ளன. இதில், இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை மாற்றம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்றவை அரசின் நிர்வாகத்தில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக, பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையில் சில ஆயிரம் கோடி பணம் மீட்க, பல இலட்சம் பணம் வீணாக்கப்பட்டுள்ளது, ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால் பல நிறுவனங்கள் திவாலாகி உள்ளது, பெட்ரோல், டீசல் விலையில் அதிக வரி விதிப்பு முறையால் பல பொருட்களின் விலை பன்மடங்கு பெருகியுள்ளது. இதனால், இந்திய பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்து வந்தது. இந்த நிலையில், நாட்டில் டாலரின் தேவை கடுமையாக உயர்ந்ததால் அதன் மதிப்பும் அதிகரித்து, இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிவடைந்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வரும் நிலையில், அதனை உடனடியாக கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கை எடுக்குமாறு ரிசர்வ் வங்கியை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. எனினும் இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. இருந்தாலும், தற்போதைய, நிலவரப்படி, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு, 22 காசுகள் சரிந்து, 72. 91 ரூபாயாக வர்த்தகமானது. இந்த சரிவும், இதுவரை இல்லாத ஒன்றாகும்.

Comment here