Sliderவேலை வாய்ப்பு

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் -டில் அப்ரென்டிஸ் வாய்ப்பு

Rate this post

நமது நாட்டில் விமானங்களுக்கான பாகங்களைத் தயாரிப்பதில் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் எனப்படும் எச்.ஏ.எல்., நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதில் 80, டெக்னீசியன் அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிட விபரம்: எலக்ட்ரானிக்சில் 35, மெக்கானிக்கலில் 14, எலக்ட்ரிகலில் 2, சிவிலில் 1, ஐ.டி.,யில் 4, கம்ப்யூட்டர் சயின்சில் 4 என 60 இடங்கள் உள்ளன.

வயது: விண்ணப்பதாரர்கள் 26 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிரேடு பிரிவில் மூன்று வருட இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். அப்ரென்டிஸ் சட்டப்படியான பயிற்சியை ஏற்கெனவே மேற்கொண்டிருக்கக் கூடாது.

தேர்ச்சி முறை: கல்வித்தகுதி மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்ச்சி இருக்கும்.

பயிற்சி எப்படி: எச்.ஏ.எல்., நடத்தும் இந்த அப்ரென்டிஸ் பயிற்சி ஒரு வருட காலத்திற்கானது. பயிற்சி காலத்தில் மாதம் ரூ.3,542 ஸ்டைபண்டாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பங்களை இ-மெயில் மூலமாக அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்: 2018 ஜூலை 27.

விபரங்களுக்குhttp://hal-india.co.in/Career_Details.aspx?Mkey=206&lKey=&Ckey=866&Divkey=35

Comment here