ஆன்மிகம்

இந்து அல்லாதவர்கள் நுழைவதை அனுமதிக்க முடியாது! -பூரி ஜெகந்நாதர் கோவில் அறிவிப்பு

Rate this post

ஒடிசாவில் உள்ள பூரி ஜெகந்நாதர் கோவிலினுள் இந்து அல்லாதவர்கள் நுழைவதை அனுமதிக்க முடியாது என கோவில் நிர்வாகத்தை சேர்ந்த சங்கராச்சாரியா நிஷ்சலனந்தா சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

ஒடிசாவின் பூரி நகரிலுள்ள ஜெகந்நாதர் கோவில் உலக அளவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். 12-ஆம் நூற்றாண்டை சேர்ந்த இக்கோவிலில் இந்துக்கள் மட்டுமே நுழைய அனுமதி உள்ளது. இந்நிலையில், ஜெகந்நாதர் கோவிலில் பார்வையாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்து மதத்தை சாராதவர்களும் கோவிலினுள் நுழைய அனுமதி அளிப்பது குறித்து மறுபரிசீலனை செய்யும்படி கோவில் நிர்வாகாத்தை கேட்டுக்கொண்டது. எனினும், இதனை விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு கடுமையாக எதிர்த்தது.

இதையடுத்து பூரி நாடாளுமன்ற உறுப்பினர் பினகி மிஸ்ரா மற்றும் கோவில் நிர்வாகத்தை சேர்ந்த மகேஸ்வர மோகந்தி உள்ளிட்ட 22 பேர் அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து இதுகுறித்து பேசினர்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த கோவில் நிர்வாகிகளில் ஒருவரான சங்கராச்சாரியா நிஷ்சலனந்தா சரஸ்வதி, பூரி ஜெகந்நாதர் கோவிலினுள் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைவதை அனுமதிக்க முடியாது என தெரிவித்தார்.

Comment here