சினிமா

இந்த இருவரும் என் தூண்கள் – வைரலாகும் அட்லீ பதிவு

Rate this post

இயக்குனர் அட்லீ தமிழில் ராஜா ராணி, மெர்சல், தெறி, பிகில் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது இயக்குனர் அட்லீ ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இதனையடுத்து, இயக்குனர் அட்லீ நேற்று (21-09-2022) தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இவருக்கு திரையுலகினர் பலர்ர் சமூகவலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இயக்குநர் அட்லீயை விஜய் மற்றும் ஷாருக்கான் இருவரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதனை அட்லீ தனது சமூகவலைதளப் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “என் பிறந்தநாளில் நான் இன்னும் என்ன கேட்க முடியும். என் தூண்களுடன் மிக சிறந்த பிறந்தநாள். மைடியர் ஷாருக்கான் சார் மற்றும் என்னோட அண்ணன் என் தளபதி விஜய்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Comment here