பொது

இனி முழு சக்தியும் கிடைக்கும் …!

இயற்கை உணவுகளை விட்டு, எப்போது செயற்கை உணவை உட்கொண்டு நோயை விலை கொடுத்து வாங்கி கொண்டோம் ….

காய்கறிகள் கலவை உணவு :
நம் காய்கறிகளை சமைத்து உட்கொள்வதால் நமக்கு தேவையான சத்துக்கள் விட்டமின்கள் கிடைப்பது இல்லை.அவற்றை வேகவைக்கும் போதே நீருடன் கரைந்து விடுகிறது.

அவற்றை தவிர்க்க பச்சை காய்கறிகளை உட்கொள்வது நல்லது .
எவ்வாறு சாப்பிட தகுந்தாற்போல் சுவையாக செய்வது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்:
தேவையான பொருட்கள் :
1.கேரட்
2.கோஸ்
3.தக்காளி
4.கொத்தமல்லி
5.மிளகு தூள்
6.உப்பு
* முதலில் கேரட்டை சிறிது சிறிதாக வெட்டி கொள்ளவும்.அதனுடன் கோஸை துருவி அதனுடன் சேர்க்கவும்…
*தக்காளியை மிகவும் சிறுது சிறிதாக வெட்டி தேவையான அளவு சேர்க்கவும்.
*கொத்தமல்லி இலையை துண்டாக்கி சேர்க்கவும்.இதன் வாசம் மிகவும் அருமையாக இருக்கும்.
*மேலும் தேவையான அளவு மிளகு தூள் மற்றும் உப்பு சேர்கவும்.
*பின்பு அதனுடன் எலுமிச்சை சாறு சிறிது சேர்க்கவும் .

-நன்றாக அதனை கலக்கி பின்பு அதனை உட்கொள்ளலாம்.இதனை தினமும் காலை அல்லது இரவு சாப்பிடலாம்.மிகவும் சத்து நிறைந்ததாக இருக்கும்.
-மேலும் சாப்பிட சுவையாக இருக்கும்.
குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற உணவு.
நன்மைகள்:
கேரட் :

கேரட்டுகளில் வைட்டமின் ஏ , ஆக்ஸிஜனேற்ற, மற்றும் பிற சத்துக்கள் உள்ளன. கேரட்டுகள் போன்ற அதிக ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவது புற்றுநோய் மற்றும் இருதய நோய் அபாயங்களை குறைக்க உதவும்.
கோஸ் :

*கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும். இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது.
* மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும்.
*சரும வறட்சியை நீக்கும். சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.
*பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.
*தலைமுடி உதிர்வதைக் குறைக்கும். முடியின் வேர்களுக்கு பலம் கொடுக்கும்.
மிளகு :

சளி, பசியின்மை, உடல் அரிப்பு, தடிப்பு, ஆஸ்துமா, சைனஸ் இவற்றிற்கெல்லாம் மிளகு மிகச்சிறந்தது .
தக்காளி :
*கண் நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
*உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் கொழுப்பு இருந்து நம் உடலை பாதுகாக்க உதவும்.
உடலில் எலும்பு வலிமை மற்றும் எலும்பு உருவாக்கம். ஒரு ஆரோக்கியமான நிலையில் பற்களை பராமரிப்பதில் இது நல்லது.

*தக்காளி விதைகள் நார்ச்சத்து அதிகம்; நார் கொழுப்பு குறைக்க அறியப்படுகிறது. தக்காளி விதைகள் நியாசின் (வைட்டமின் பி 3) நிறைந்த ஆதாரங்கள். நியாசின் பல ஆண்டுகளாக கொழுப்பு அளவுகளை குறைக்க பயன்படுத்தப்படுகிறது.
கொத்தமல்லி :
கொத்தமல்லி, வயிற்றுப்போக்கு, குடலிறக்கம், குமட்டல், குமட்டல், வயிற்றுப்போக்கு, குடலிறக்கம் மற்றும் குடல் வாயு ஆகியவற்றால் செரிமானம் ஏற்படுகிறது.

இது தட்டம்மை, மூல நோய், பல்வலி, புழுக்கள் மற்றும் மூட்டு வலி, அத்துடன் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் தொற்று நோய்களுக்கும் சிகிச்சையளிக்கப்படுகிறது.

Comment here