சினிமா

இனி யாரும் என் காலில் விழ வேண்டாம்… – நடிகர் ராகவா லாரன்ஸ் டுவிட்

Rate this post

இனி யாரும் என் காலில் விழ வேண்டாம் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் ராகவா லாரன்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது ‘ருத்ரன்’, ‘சந்திரமுகி 2’, ‘அதிகாரம்’, ‘துர்கா’ உள்பட பல படங்கள் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ராகவா லாரன்ஸ் டுவிட்டர் பக்கத்தில் இனி, மக்களுக்குச் சேவை செய்யும் முழுப் பொறுப்பையும் நானே ஏற்க முடிவு செய்துள்ளேன். எனவே, தனது அறக்கட்டளைக்கு உங்கள் பணத்தை நன்கொடையாக வழங்க வேண்டாம் என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், மீண்டும் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், இனி நான் யாருக்கு உதவி செய்தாலும், அவர்கள் என் காலில் விழக்கூடாது. அவர்களின் காலில் நான் விழுந்துதான் என் சேவையைச் செய்வேன். சேவையே கடவுள் என்று பதிவிட்டுள்ளார்.

Comment here