வானிலை

இன்றைய வானிலை

Rate this post

⛅⛅⛅⛅⛅⛅தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழையானது தீவிரம் குறைந்துள்ள நிலையில் தீபாவளி பண்டிகை Dry Weather உடன் நிறைவு பெற்றது. நேற்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்துள்ளது.🌦 வட தமிழ்நாடு, பாண்டிச்சேரி, சென்னை ஆகிய இடங்களில் இன்றும் மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை. இலங்கை/கன்னியாகுமரி/மன்னார் குடா கடல் பகுதியில் நிலவு வரும் காற்றழுத்த தாழ்வு நிலை ( well marked Low Pressure Area) மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, கன்னியாகுமரி கடலில் நிலை கொண்டு அடுத்த 3 தினங்களுக்குள் வலுவிழக்க கூடும். இதன் காரணமாக தென் தமிழ்நாட்டில் நல்ல மழை பெய்யலாம். டெல்டா மாவட்டங்களில் லேசான/மிதமான மழை இருக்க கூடும். தென் தமிழக, கன்னியாகுமரி மீனவர்களுக்கான பலத்த காற்று எச்சரிக்கை தொடர்கிறது.🌪 *எதிர் வரும் 9ம் தேதி, அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. அது வலுப்பெற்று தமிழகம் நோக்கி நகரக் கூடும். எனவே 10ம் தேதிக்கு பின்னரே தமிழக வானிலையில் மாற்றம் இருக்க கூடும்.* இன்று வட தமிழகம் முழுவதும் வானம் தெளிவாக காணப்படும்.

*கடலூர் வானிலை*:
வானம் தெளிவாக (Sunny) காணப்படும்.⛅ சில சமயங்களில் மேகமூட்டமாக காணப்படும்.⛅⛅ இன்று மழை பெய்ய வாய்ப்பு இல்லை. ⛅⛅⛅⛅⛅

*Just now weather*:
வெப்பநிலை:24.3°C
Pressure: 1009mb,
காற்று: 08kmph
கடல் சீற்றம்: 0.5m

🎣தமிழக மீனவர்களுக்கான சிறப்பு 🌪 எச்சரிக்கை ஏதும் இல்லை.

🌊🌊🌊🌊🌊🌊
*தமிழ் நாட்டில் புயல் எச்சரிக்கை கொடி எதுவும் அறிவிக்கப்படவில்லை*. *Predictions are subject to change.
compiled By J.Jebasingh, Cuddalore Port.

Comment here