உலகம்

இம்ரான் கானுக்கு எதிர்ப்பு அமெரிக்காவில் பலோசிஸ்தான் ஆர்வலர்கள் கோஷம்

அமெரிக்காவுக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சென்றுள்ளார். இம்ரான் கான் வாஷிங்டனில் பாகிஸ்தான் வம்சவாளி மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் ஏராளமான பாகிஸ்தான் வம்சாவளியினர் கலந்து கொண்டனர். அவர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் இம்ரான் கான் உரை நிகழ்த்தி கொண்டு இருந்த போது, அங்கு வந்து இருந்த பலோசிஸ்தான் ஆர்வலர்கள் இம்ரான் கானுக்கு எதிராக கோஷம் இட்டனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாவலர்கள் அவர்களை உடனடியாக வெளியே செல்லுமாறு வலியுறுத்தினர்.

இதற்கிடையே, பலோசிஸ்தானில் மக்கள் காணாமல் போவதற்கு, டிரம்ப் தலையிட்டு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி பலோசிஸ்தான் குழுவினர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி வாஷிங்டன் டிசி நகரில் பிரம்மாண்ட பதாகைகளையும் பலோசிஸ்தான் ஆர்வலர்கள் வைத்துள்ளனர்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்கா வந்திருப்பது இதுதான் முதல் முறையாகும். முதல் முறையாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை நேருக்கு நேர் இம்ரான் கான் சந்தித்து பேச உள்ளார்.

Comment here