இயற்கையின் எழில் வண்ணம் கோவா

Rate this post

கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் கோவா பகுதி, மன்னர் அசோகரின் ஆட்சியின் கீழ் இருந்துவந்துள்ளது. அதன் பிறகு சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்கள், டெல்லி சுல்த்தான்கள், விஜயநகர பேரரசர்கள், என மாறி, மாறி  வந்த ஆட்சிக்கு  பிறகு விஜய நகர மன்னர்களிடமிருந்து பீஜப்பூர் சுல்தான்களின் வசமானது. இந்நிலையில் கோவாவில் திம்மையன் என்பவன் இருந்தான், அவன் ஒரு கடற்கொள்ளையன், அவனிடம் ஒரு படையே இருந்தது.  அந்த படையை வைத்துகொண்டு, வணிக ஒப்பந்தங்கள் செய்வது, ராஜாக்களுக்கு உதவுவது, என்று தனி அரசாட்சி நடத்திக் கொண்டிருந்தான். அவன் பல முறை கடல் பகுதிகளில் போர்சிக்கீசிய கடற்படையை சந்தித்து, அவர்களோடு ரகசிய உறவும் வைத்திருந்தான். பீஜப்பூர் சுல்த்தான்கள் வழியில் வந்த அதில் ஷா என்ற மன்னன், பலவீனமாக இருப்பதாகவும், இப்போது அவனை தாக்கினால், கோவாவை கைப்பற்றிவிடலாம் என்றும் போர்ச்சுகீசியரிடம் தகவல் அளித்தான். போர்ச்சுகீசியர்கள், விஜயநகர மன்னருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, கோவாவை தாக்கி வெற்றி கண்டனர். பிறகு ஒப்பந்தப்படி, கோவாவை தங்களுடையதாக்கிக் கொண்டனர். அதன்படி 1510  ம் ஆண்டு கோவா போர்ச்சுகீசிய ஆளுகையின் கீழ் வந்தது. தொடர்ந்து ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தினர். அப்போது கோவாவின் சில பகுதிகளையும் பிரிடிஷ்காரர்கள் கைப்பற்றினர். ஆனால் பெரும்பாலான பகுதி போர்சுகீசியர் வசமே இருந்தது. இதனால் போர்சுகீசியரும் ஆங்கிலேயர்களும் கோவா எங்களுக்குத்தான் என்று போர் புரிந்தனர். பல கிளர்சிகள், போராட்டங்கள், அறப் போரட்டங்களுக்கு பிறகு ஆங்கிலேய அரசு இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கி விட்டு சென்றுவிட்டது. ஆங்கிலேயர்கள் சென்ற பிறகும் கோவா எங்களுக்கே என்று போர்சுகீசியர்கள் சொந்தம் கொண்டாடி வந்தனர். கோவாவிலிருந்து போர்ச்சுகல் வெளியேற வேண்டும் என்று பல்வேறு இயக்கங்கள் அமைதியாக போராட்டம் நடத்தின. இந்திய அரசும், சர்வதேச அளவில் அழுத்தம் கொடுத்து பார்த்தது. எதுவுமே கைகொடுக்கவில்லை. இறுதியில் போர் தான் என்று முடிவு செய்யப்பட்டது. இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு உத்தரவின்படி, இந்திய இராணுவத்தின் மேஜர் ஜெனரல் கே.பி.காண்டெத் தலைமையிலான ராணுவம் 1961  ம் ஆண்டு டிசம்பர் 12 ந் தேதி கோவா, டையூ, டாமன் பகுதிகளை முற்றுகையிட்டனர். போர்ச்சுகீசியர்களுடன் ராணுவ தளபதி பேச்சுவார்த்தை நடத்தினார். அனால் அது சரிபட்டு வரவில்லை. எனவே டிசம்பர் 18  ந் தேதி போர் தொடங்கியது. இந்த போரில் ராணுவம், கடற்படை, விமானப்படைஆகிய மூன்றும் பயன்படுத்தப்பட்டது. இறுதியில் டிசம்பர் 19 ந் தேதி கோவாவில் போர்சுகீசிய கவர்னராக இருந்தவர், நாங்கள் கொவவைவிடு வெளியேறுகிறோம் என்று இந்திய ராணுவ தளபதியிடம் எழுதிக்கொடுதார். இந்த வெற்றிக்கு பிறகு இந்திய ஒன்றியத்தின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றாக, மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருந்து வந்த கோவா, 26  ஆண்டுகளுக்கு பிறகு 1987  ம் ஆண்டு மே மாதம் 30 ந் தேதி, தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. இந்தியாவின் மிக சிறிய மாநிலமான கோவாவின் மொத்த பரப்பளவு 3,702 கிலோமீட்டர். இதில் 59  சதவீதம் காடுகள், மொத்த பரப்பளவில் 101 கிலோமீட்டர்கள் கடலோர பகுதி. இங்குள்ள மக்கள் கொங்காணி மொழி பேசுகிறார்கள். இந்த மொழிதான் அங்கு ஆட்சி மொழியாகவும் இருக்கிறது. வடக்கு கோவா, தெற்கு கோவா என்று இரண்டு மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் தலைநகர் வடக்கு கோவாவில் உள்ள பானாஜிஎன்ற பகுதியாகும். தெற்கு கோவாவின் மாவட்ட தலைநகராக மார்கோவா என்ற இடம் விளங்குகிறது.கோவா மாநிலத்தில் 40 சட்டமன்ற தொகுதியும், ஒரு பாராளுமன்ற தொகுதியும் உள்ளது. கோவாவின் சுற்றுலா பொதுவாக கடற்கரையை மையமாக கொண்டுள்ளது. இங்கு பிரிடிஷ்காரர்கள் அதிக அளவில் வருகை புரிகின்றனர். மண்டோ மற்றும் டல்பாட்ஆகியவை கோவாவின் பாரம்பரிய இசை வடிவங்களாகும். கலங்கு கடற்க்கரை, பாகா கடற்க்கரை புகழ் பெற்றவையாகும். இந்திய,முகலாய, போர்சுகீசிய முறைகளில் கட்டப்பட்ட கட்டிடங்கள் உள்ளன. வாஸ்கோ நகரத்திற்கு அருகில் உள்ள மர்ம கோவா துறைமுகம் கனிம தாதுக்கள், பெட்ரோலியம், நிலக்கரி மற்றும் பன்னாட்டு சரக்குகளை கையாள்கிறது.மண்டோவி நதிக்கரையில் அமைந்துள்ள பானஜிம் என்ற சிறிய துறைமுகம் கோவா மற்றும் மும்பைக்கிடையே இயங்கிவருகின்றது. சுற்றுலா பயணிகளுக்கென மீட்டர் இல்லாத கார்கள், இரண்டு சகர வாகனங்கள் வாடகைக்கு கிடைக்கின்றன.  கோவாவில் மது பானங்களுக்கு குறைந்த அளவே வரி விதிக்கபடுவதால் மது பிரியர்களின் சொர்கபூமியாக திகழ்கிறது. இந்தியாவின் இயற்க்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாக  திகழும் கோவாவில் மகிழ்ச்சியையும், சுதந்திரத்தையும் முழுமையாக அனுபவிக்கலாம். இதற்க்காகவே உலகின் பல்வேறு பகுதிகளிருந்தும் எராளமான சுற்றுலா பயணிகள் கோவாவை தேர்ந்தெடுத்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் முலம் கோவாவிற்கு அதிக வருமானமும் கிடைக்கிறது.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*