ஆன்மிகம்தமிழகம்வாழ்க்கை நலன்

இயற்கையோடு இணைந்த பொங்கல் திருவிழா…

5 (100%) 1 vote

 

தமிழர் திருநலம் பொங்கல் பண்டிகை என்பது இயற்கை, விவசாயம், தாவரங்கள் போறவற்றை வணங்கும் பொருட்டு கொண்டாடப்படும் பெருவிழாவாகும். பொங்கல் திருவிழா என்பது தமிழகத்தில் சங்க காலம் தொட்டு பலகா மாற்றங்கள் பெற்று மாறுபட்டு இருந்தாலும் இன்றளவும், பெரும் தமிழர் பண்பாட்டு விழாவாக உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் சாதி, சமய வேறுபாடுகள் இன்றி அனைவராலும் அற்பரிபுடன் கொண்டடபடுகிறது. தமிழரின் பெருமைமிகு விழாவான பொங்கல் தை மாத பிறப்பில் கொண்டாடப்பட்டாலும் முன்பு தை மாதத்தின் பிற நாட்களிலும் கொண்டாடப்பட்டுள்ளது. சங்க காலத்தின் தை நீராடல், பாவை நோன்பு, இந்திரவிழா, என ஆனதும் பொங்கல் பண்டிகையை தான் குறிப்பிடுகின்றன. இந்திரவிழா என்பது காவிரிபூம்பட்டிணத்தில் தை மாதத்தில் 28  நாட்கள் கொண்டாடப்பட்ட பெருந்திருவிழா. இன்றைய நாளில் அது 4 நாட்கள் திருவிழாவாக சுருங்கியது.நாம் வாழ்வதற்கு உதவி புரியும் இயற்கையையும் விவசாயத்தையும் அதில் கிடைக்கும் நெல் போன்ற தானியங்களை வைத்து கொண்டாடப்படும் பொங்கல் திருநாள் தமிழர்திருநாள்,  அறுவடை திருநாள் உழவர்த்திருநாள், என பல சிறப்பு பெயர்களுடம் அழைக்கபடுகிறது.”பொங்கல்” என்பது நிறைவு , அதிகரித்தல், பொலிவு என்பதை குறிக்கும். அதனாலேயே  இத் திருவிழா பொங்கல் பண்டிகை என பெயர் பெற்றது \. மனித வாழ்விற்கு பேருதவி புரிவது இயற்கையே. அந்த இயற்கையை தெய்வமாக பாவித்து அதனை வணங்குவதே பொங்கல் பண்டிகையின் சிறப்பு பொங்கல் பண்டிகை 4  நாட்களில் கொண்டாடப்படும் கொண்ட்டாட்டம் என்பது போகி, சூரிய பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல் என்றவாறு வகைப் படுத் தப்பட்டுள்ளது. இயற்கையை வணங்குவது என்பதில் போகி பண்டிகை அன்று மழை கடவுளான இந்திரனை வணங்கும் பண்டிகை. பழையனவற்றை நீக்கி வீடுகளை சுத்தபடுத்தி இன்டிரனைவணங்கும் போகிபண்டிகை கொண்டடபடுகிறது. மறுநாள் பொங்கல், பெரும்பொங்கல் என்று அழைக்கப்படுகிறது. புது பானையில்  வாசலில் அடுப்பு அமைத்து பொங்கலிட்டு சூரிய பகவானை வழிபடுவது. விவசாயத்திற்கு உதவிய உழவு கருவிகளையும், நிலத்தை உழுத காளை மாடுகளுக்கு வண்ணம் தீட்டியும், வீட்டில் வளர்க்கப்படும் பசு மாடுகளுக்கு  அலங்கரித்தும் பசுமாடுகளையும் வணங்கும் விதமாக மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் விழாவில் முக்கிய இடம் பிடிப்பது நெற்கதிர்கள் தான் .நெல் குவியலை குவித்து வைத்து தான் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவார்கள். இந்த புது நெற்கதிரை குத்தி அரிசியாக்கி அந்த அரிசியில் தான் பொங்கக் செய்து இயற்கையை விவசாயத்தில் தாக்கு உணவிடும் தவரங்கல்கையும் வணங்குகின்றனர். நேர்கதிகளுடன், கரும்பு, வாழை, மஞ்சள், இஞ்சி, வள்ளிகிழங்கு, செனைகிழங்கு, சிறுகிழங்கு, பனங்கிழங்கு, சேப்பங்கிழங்கு, போர்வையும், பூசணி, மொச்சை, சுரைக்காய், கத்திரிக்காய் வைத்து வணங்கபடுகின்றன. நமது தமிழ் பண்பாட்டையும், கலச்சரதையும், வாழ்வாதாரத்தையும்  பேணி பாதுகாக்கும் விதமாகவும் பொங்கல் திருவிழா அமைந்துள்ளது. .

Comment here