மருத்துவம்

இராவணன் உருவாக்கிய சிந்தாமணி மருத்துவம்

Rate this post

சித்த மருத்துவத்திற்கு மிகவும் முந்தையகாலத்தில் தமிழர்களின் மருத்துவ முறையாக இருந்தது சிந்தாமணி மருத்துவம் தான். இந்த சிந்தாமணி மருத்துவம் இராவணன் உருவாக்கிய மருத்துவ முறையாகும். வரலாற்றில் தவறாக சித்தரிக்கப்பட்ட இராவணனின் கதாபாத்திரமே நம்மில் பெரும்பாலானோரின் கண் முன் வந்து நிற்கும். ஆனால் அவர் ஒரு தலைசிறந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் ஆவார்.

சிந்தாமணி மருத்துவம்:

இப்போதும் வட இந்தியாவில் ராவண சம்ஹிதா என ராவணனின் பெயரிலேயே மருத்துவக் குறிப்புகள் அடங்கிய சில புத்தகங்கள் புழக்கத்தில் உள்ளன. இப்புத்தகத்தின் தமிழ்ப்பெயர் சிந்தாமணி மருத்துவம். ராவணன் நன்கு ஆராய்ந்து உருவாக்கியது தான் சிந்தாமணி மருத்துவம். இப்புத்தகத்தை அவர் முழுக்க முழுக்க தமிழில் எழுதி இருந்தார். வட சொல்லோ அல்லது சமஸ்கிருதமோ இல்லாமல்தான் எழுதியிருந்தார்.

இராவணன் மருத்துவம் க்கான பட முடிவு

ராவணன் எழுதியது:

சித்த மருத்துவத்தில் அக மருந்துக்கள் 32 மற்றும் புற மருந்துக்கள் 32 வகையறாக்கள்தான் உள்ளன. ஆனால் இராவணன் எழுதிய சிந்தாமணி மருத்துவத்தில் அக மருந்துவ முறைகள் 50ம், புற மருத்துவ முறைகள் 60க்கு மேற்பட்டதாகவும் இருந்ததாக இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோமாவில் உள்ள மனிதர்களை மீண்டும் சுயநினைவுக்கு கொண்டுவரும் சிகிச்சை முறையும் இதில் உள்ளது. முதலில் தமிழில் வெளியான மருத்துவ ஆராய்ச்சிக் குறிப்புகள், பின்னரே சமஸ்கிருதம், மலையாளம், தெலுங்கு, இந்தி, உருது, சிங்களம் என பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

விசேட சிகிச்சைகள்:

விபத்துகளின் போது ஏற்படும் காயங்களுக்கு சித்த முறையில் சிகிச்சைகள் இல்லை ஆனால் இராவணின் சிந்தாமணி மருத்துவதில் அதற்கும் தீர்வுகள் உண்டு. முதுகெலும்பு வளைவு, இடுப்பு எலும்பு தேய்மானம், எலும்பு முறிவு, மூளையில் ரத்தக் கசிவு போன்ற நோய்களும் இவரின் மருத்துவ முறையில் தீர்வுகள் உண்டு.

இன்றும் வாழ்கிறது:

இராவணின் சிந்தாமணி மருத்துவ முறையின் ஒரு சில பகுதிகள்தான் தற்போது பின்பற்றப்படும் சித்த மருத்துவ முறை. தமிழகத்தின் தென் எல்லையான கன்னியாகுமரியில் இன்றளவும் சில சிந்தாமணி வைத்தியச் சாலைகள் இயங்கி வருகின்றன என்பதுதான் மிகவும் ஆச்சரியமான செய்தி. பண்டையத் தமிழ் இலக்கியங்களையும், அவைதம் பெருமைகளையும், தமிழினத்தின் கலாச்சார நாகரீகக் குறியீடுகளையும் வெளிக்கொண்டுவர குரல் கொடுக்கும் யாவரும் ராவணன் இயற்றிய சிந்தாமணி மருத்துவ முறையை அழிய விடாமல் தடுக்கவும், இன்னும் நீண்ட நெடிய வரலாற்று காலங்களுக்கு இதை கொண்டு செல்லவும் குரலெழுப்ப வேண்டும் என்பதே வரலாற்று ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Comment here