குறுகிய செய்திபொது

இரும்பு அடிக்கிற இடத்தில் ஈ க்கு என்ன வேலை?

ஊருக்கு இளிச்சவாயன் பிள்ளையார் கோவில் ஆன்டி ன்னு சொல்றாங்கல அது இது தானா

NTN சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசசிவாச்சாரியார்

பொன்பரப்பில என்னடா சண்டை?

வன்னியருக்கும் தலித்துக்கும்

புதுகோட்டையில‌

தேவருக்கும் முத்தரையருக்கும்

நெல்லை பக்கம் என்ன தகறாறு?

அங்கே நாடார் தேவர், தேவர் தாழ்த்தபட்ட்டோர், தாழ்த்தபட்டோர் கோனார்கள், நாடார் பரதவர் என பல சண்டைகள்

கன்னியாகுமரியில் நடப்பதென்ன?

பெரும்பாலும் நாடார்கள் ஆனால் அவர்களுக்கும் மீணவர்களுக்கும், குரூப்புகளுக்கும் ஆகாது

சாத்தூர் விருதுநகர் பக்கம்?

மாட்டுவண்டியில் வியாபாரம் பார்த்த காலங்களிலே சாதி கலவரங்கள் நடந்த இடம்

அந்த கமுதி பக்கம்?

இம்மானுவேல் சேகரனின் கல்லறையே சாட்சி

விழுப்புரம் பக்கம்?

அங்கே காடுவெட்டி குருவின் பேச்சுக்களுக்கு இருக்கும் வரவேற்பே சொல்லும், திருமாவின் எழுச்சியும் சில விஷ்யங்களை சொல்லும்

ஈரோட்டு பக்கம்?

அதெல்லாம் கொங்குநாடு, யுவராஜ் கவுண்டரின் வீரம் உலகறிந்தது

சேலம் தர்மபுரி?

பாமாக காலூன்றி இருக்கும் இடம் என்பதால் சொல்ல ஒன்றுமில்லை

திருச்சி பக்கம்?

அண்ணே அதெல்லாம் முத்தரையர் ஏரியா

தேனி ஆண்டிபட்டி பக்கம்

அய்யோ அதெல்லாம் தேவரய்யாவ கும்பிடுற பூமி

தஞ்சாவூர் பக்கம்?

கீழவெண்மணி முதல் ஏராளம்

ஆக ஒவ்வொரு ஏரியாவிலும் ஒரு சாதி இன்னொரு சாதியுடன் மோதல், கொலை கலவரம்.

ஆமாண்ணே

இது போக நாயுடு ஏரியா, நாயக்கர் ஏரியா?

கண்டிப்பாண்ணே

இதில் பிராமணன் எங்கு எந்த சாதியினை அடித்தான்? யாரை கொளுத்தி கொன்றான்

அண்ணே சாதிவெறி பிராமணர் ஒழிக, அவனுகதான் எல்லாவற்றிற்கும் காரணம்

டேய் வெட்டிட்டு சாகிறது இவனுக? அவங்க எப்படி?

அவங்கதான் சாதியை உண்டாக்கி வெட்ட சொன்னாங்க‌

எங்க சொன்னாங்க? அவங்க சொன்னா நீங்க ஏண்டா வெட்டுறீங்க?

இல்லண்ணே அவனுகதான் உண்டாக்கினது, இப்ப தொடருது, விடமுடியாதுண்ணே

அடேய் அவனுகளே வேண்டாம்னா அந்த சாதியும் உங்களுக்கு வேண்டாம்ல, தூற எறிஞ்சிட்டு அமைதியா வாழுங்கடா

அதெல்லாம் முடியாது. அவன் அன்னைக்கு சொன்னதாலதான் வெட்டிட்டு சாகுறோம்

டேய் சாதிவெறி இருக்கிறது உங்களுக்கா பிராமணனுக்கா

ஹிஹிஹி சத்தியமா எங்களுக்குத்தான்.

நில்லுடா இதுக்கு பதில் சொல்லு

கிரானைட் கொள்ளை அடிச்சது பிராமணனா?

இல்ல‌

தாதுமணலை சுரண்டுனது பிராமணனா?

இல்ல‌

ஆற்றுமணலை விற்றுகொண்டிருப்பது பிராமணனா?

இல்ல

இந்த கட்டபஞ்சாயத்து கூலிப்படை எல்லாம் பிராமணனாடா?

இல்ல‌

தமிழ்நாட்டில் பிராமணர் தொழிற்சாலை எவ்வளவு?

தெரியாதுண்ணே, நிறைய இல்லை

பிராமணர் நடத்தும் மது ஆலை?

அதுவும் இல்லண்ணே

பிராமணர் நடத்தும் பொறியியல் , மருத்துவ கல்லூரி?

அதுவும் ஒண்ணு கூட இல்லண்ணே

பிராமணர் நடத்துன் நிகர்நிலை பல்கலைகழகம்?

அதுவும் இல்லண்ணே

பிராமணர் நடத்தும் பிரமாண்ட மருத்துவமனை?

அதுவும் இல்லண்ணே?

பிராமணர் டிவி?

அதுவும் இல்லண்ணே

தமிழ்நாட்டு நகைகடை, ஜவுளிகடை, டிப்பார்மெண்டல் ஸ்டோர், ஹோட்டல், உணவகம், வட்டிகடை என எல்லா தொழிலிலும் பிராமணனுக்கு எவ்வளவுடா இருக்கு?

தெரியலண்ணே

டேய் சென்னையில எவ்வளவு பிராமணனுக்கு பிரமாண்ட கடை இருக்கு சொல்லு

சொல்ல தெரியலண்ணே, ஒண்ணும் இருக்குற மாதிரி தெரியல‌

தமிழ்நாட்டில் எத்தனை பிராமண எம்பி இருக்கான்?

தெரியலண்ணே

பிராமண எம்.எல்.ஏ?

அதுவும் தெரியலண்ணே..

தமிழ்நாட்டில் ஏதும் பிராமண அமைச்சர்?

அப்படியும் தெரியலண்ணே

தொழிற்சாலை, கல்வி நிலையம், மண் திருட்டு, மலை திருட்டு, வெடி தொழிற்சாலை, மருத்துவமனை என ஒன்று கூட அவர்களை சொல்லமுடியாது, ஆனால் பிராமணன் ஆண்டான், சுரண்டினான், முன்னேற விடமாட்டான் என சொல்லிகொண்டே இருக்கவேண்டும் அப்படித்தானே?

அட போங்கண்ணே இது பெரியார் மண்ணுண்ணே

அதான்டா பிராமணன காட்டி காட்டி நல்லா சம்பாதிச்சி செட்டில் ஆனது யாருடா?

இருங்கண்ணே விசாரிச்சிட்டு வாரேன்

என்ன விசாரிக்க போறே?

நீங்க ஏதோ ஒரு பிராமணன்கிட்ட லம்பா ஒரு தொகை அடிச்சிட்டீங்க, அத விசாரிச்சிட்டு வாரேன்”…
நன்றி….

Comment here