Sliderவரலாறு

இலக்கியங்கள் காட்டும் வரலாற்றுச் செய்திகள்

5 (100%) 1 vote

 

சிலப்பதிகாரம் நமக்குக் கிட்டாமல் போயிருந்தால் மற்ற தமிழிலக்கியப் பரப்பின் உதவியாலோ, தொல் காப்பியம், திருக்குறள் ஆகிய நூல்களாலோகூட நாம் பண்டைத் தமிழிலக்கியத்தின் அரும்பெரும் மாண்பையும் அகல் விரிவையும் அவ்வ ளவாக மதிப்பிட்டு அறிய முடியாத வர்கள் ஆவோம்’என அறிஞர் கா. அப்பாத்துரையார் அவர்கள் குறிப்பிடுகிறார்

சோழ நாட்டில் பிறந்த கண்ணகி பாண்டிய நாட்டிற்குப் பிழைக்கச் சென்ற தன் கணவன் கோவலனுடன் சென்று, அங்கு பொய்யாகக் கள்வன் என குற்றம்சாட்டப்பட்ட கணவனை இழந்து மனம் பொறாமல் சினத்துடன் பாண்டி யன் அவைக்குச் சென்று, தனது கணவன் கள்வன் அல்லன் மன்னனே தவறிழைத்தவன் என்பதை நிறுவி, அவன் உயிரிழக்கக் காரணமாகி மதுரையையும் எரித்து சேர நாடு நோக்கிச் சென்று தெய்வமாகிறாள் என்பது சிலப்பதிகாரக் கதையின் சுருக்கமாகும்.
மேற்கே கிரேக்கம், எகிப்து, ரோமாபுரி ஆகிய நாடுகள் வரைக்கும் கிழக்கே தென் கிழக்காசிய நாடுகளுக்கு அப்பால் சீனம் வரையிலும் சென்று வணிகம் நடத்தி பொருளீட்டியவர்கள் தமிழர்கள். தமிழ் வணிக வர்க்க வளர்ச்சியின் அடையாள முத்திரை பலமாக சிலப்பதிகாரத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ் வணிகர்கள் எந்த அளவுக்குச் செல்வச் செழிப்புடன் திகழ்ந்தார்கள் என்பதை கோவலன் வரலாறு நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
கோவலன் – கண்ணகி திருமணச் செய்தியினை நகர மக்களுக்கு அறிவிக்க யானை மேல் முரசு அறைந்து அறிவித்ததாகச் சிலம்பு கூறுகிறது. மன்னர்கள் குடும்பத்தில் நடக்கும் திருமணத்தைப் போல கோவலன் – கண்ணகி திருமணமும் கோலாகலமாக நடைபெற்றது. இதன் மூலம் அரசர்களுக்கு இணையாக வணிகர்கள் செல்வ வளத்தில் திளைத்தார்கள் என்பது தெரிகிறது.

வணிகர்கள் பெரும்பாலும் அப்போது சமண சமயத்தைச் சார்ந்தவர்களாகத் திகழ்ந் தார்கள். மன்னர்கள் சைவ சமயத்தைச் சார்ந்திருந்தார்கள்.எனது தெரிகிறது
வணிக வர்க்கத்திற்கும் மன்னர் வர்க்கத்திற்கும் இடையே முரண் பாடுகள் மூண்டதற்கு செல்வ வளமும் சமயச் சார்பும் காரணங்களாக அமைந் தன. சிலப்பதிகாரக் கதை இந்த முரண் பாட்டைச் சுற்றியே பின்னப் பட்டுள்ளது.

தமிழர்களின் பண்பாட்டு வரலாற் றினையும் அரசியல் வரலாற்றினையும் சமுதாய வரலாற்றினையும் ஒருங்கே கூறும் ஒப்பில்லாத நூல் சிலப்பதிகாரம்.

சிலப்பதிகாரக் காப்பியத்தில் மூன்று மாமன்னர்கள் குறிப்பிடப்படு கிறார்கள். பொற்கோட்டு இமயத்துப் புலிபொறித்து ஆண்ட பூம்புகார்ச் சோழன் கரிகால் பெருவளத்தான், ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன், வடபுல மன்னரின் கொட்டம் ஒடுக்கிய சேரன் செங்குட்டுவன் ஆகிய மூன்று மன்னர்கள் இக்காப்பியத்தில் குறிப்பிடப் படுகிறார்கள்.

வடபுலத்து மன்னர் தமிழரை இகழ்ந்தனர் என்பதை அறிந்து கொதித்த சேரன் செங்குட்டுவன் வடபுலம் நோக்கிப் படையெடுத்துச் சென்று பகைவரை வென்று இமயத்தில் கல்லெடுத்து கனகவிசயர் தலையில் ஏற்றி தமிழகம் கொண்டுவந்து கண்ணகிக் கோட்டம் அமைத்தான் என்பது போன்ற தமிழர் வரலாற்றில் முக்கிய நிகழ்ச்சிகள் இக்காப்பியத்தில் குறிப்பிடப்படுகின்றன.

இவ்வாறு பல வரலாற்று நிகழ்வுகள் சிலம்பில் காணப்பட்டாலும் , அதைஉண்மை என நிறுவ வேண்டிய வரலாற்றுத் தரவுகள் இன்னமும் திரட்டப்படாதது வேதனையே .
இன்னமும் பண்டைய பூம்புகார் கடலுக்குள் பத்திரமாக முழுகிக் கிடக்கிறது .
வஞ்சி ஆராயப்படவில்லை . மதுரையும் இன்னமும் சரிவர ஆராயப்படவில்லை .
இவ்வாறு இலக்கிய தரவுகள் ,கிடைத்த வரலாற்று எச்சங்களோடு ஒப்புநோக்கில் சரிவர ஆராயப்படவில்லை .
தமிழகத்தைப்போல இலக்கியங்களில் குறிப்பிடப்படும் செங்குட்டுவனின்
படையெப டுப்பையும் , இமயத்தில் இலச்சினை பொறித்த கரிகாலன் பற்றியும் ,
ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன்,பற்றியும் வட இந்தியாவில் சான்றுகள் தேடி ஆராயப்படவேண்டும் .இந்திய வரலாற்று பேராசிரியர்களுக்குள் ஒருங்கிணைப்பு வேண்டும்
காரவேலனின் ஹதி கும்பா கல்வெட்டின் மூலம் வெளியான மூவேந்தர் கூட்டணி
130 ஆண்டுகள் நீடித்திருந்ததுபோலசெய்திகள் இன்னமும் பல தரவுகளையும் திரட்டவேண்டும் .அத்தகைய ஆய்வில் பாலகிருஷ்ணன் IAS , ஒரிசா பாலு போன்றோர் அதிக பங்களிப்புத்தந்து வருகிறார்கள் .இன்னமும் பலர் தேவை
-அண்ணாமலை சுகுமாரன்

Comment here