தமிழகம்

இலங்கைத் தீவின் மேற்குக் கரையில் தலை மன்னார்

Rate this post

இன்றைய ஆதம் பாலம் அன்றைய …………..?

பாக் நீரிணைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். சற்று தெற்கே சென்று மன்னார் வளைகுடாவைப் பார்ப்போமா?

சாலையில் அதிக வாகனங்கள் இல்லை. எங்கள் வண்டி தனுஷ்கோடியைத் தாண்டி அரிச்சல்முனை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. சாலையின் இருமருங்கிலும் ஆங்காங்கே வெள்ளை நிற பாறைத் துண்டுகள் வித்தியாசமாகத் தென்பட்டன. பவளப் பாறைகளாக இருக்குமோ… . இறங்கிப் பார்த்தேன், ஆம். பவளப் பாறைகள்தான். அலைகளில் அலைக்கழிக்கப்பட்டு இந்த கடலோர சாலையில் ஒதுங்கியிருக்கின்றன. அப்படியென்றால் இங்கே வெகு அருகில் பவளப்பாறை தீவுகள் இருக்கவேண்டுமே.

பவளப்பாறை என்பது உண்மையில் பாறை அல்ல. CORAL (பவளம்) எனும் கடல்வாழ் உயிரினத்தின் தொகுப்புகளால் அமையப் பெற்ற சுண்ணாம்புக் கூடு (Calcium carbonate nests formed by coral colonies).

.

இந்தியாவைப் பொறுத்தவரை, இராமேஸ்வரத்திற்கும் தூத்துக்குடிக்கும் இடைப்பட்ட பகுதியில் மன்னார் வளைகுடாவின் மேற்குக் கரையோரம் பவளப்பாறை தீவுகள் அதிகமாகக் காணப்படுகின்றன. பவளப்பாறைகள் வளர ஏற்ற இயற்கை சூழல் இங்கே நிலவுகிறது.

மொத்தம் 21 தீவுகள் உள்ளன.
சுமார் 160 கி.மீ நீளத்திற்கு சங்கிலித்தொடர் போல் அமைந்திருக்கும் இந்தத் தீவுகள் அனைத்தும் கடற்கரையிலிருந்து 10 கி.மீ. தொலைவிற்குள்ளேயே அமைந்துள்ளன. மிகச் சிறிய தீவு 0.25 ஹெக்டேர் (0.62 ஏக்கர்)பரப்பளவிலும் மிகப்பெரிய தீவு 130 ஹெக்டேர் (321.2 ஏக்கர்) பரப்பளவிலும் காணப்படுகிறது. தீவுகளின் மொத்தப் பரப்பளவு 6.23 ச.கி.மீ. இந்தப் பகுதி நடுவண் அரசால், பாதுகாக்கப்பட்ட உயிரியல்மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பவளப்பாறைகள் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழ்வதால் இவை FRINGE REEF என அழைக்கப்படுகின்றன. BARRIER REEF, ATOLL போன்றவை கடலின் வேறு பகுதியில் வாழும் பவளப் பாறைகள் .

இதுகாறும் நாம் பார்த்தது மன்னார் வளைகுடாவின் வடமேற்குக் கரையில் துத்துக்குடிக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடைப்பட்ட பகுதி. இதை அப்படியே விட்டு விட்டு மன்னார் வளைகுடாவின் கிழக்குக் கரைக்குப் போவோம் வாருங்கள்.

இங்கே இலங்கைத் தீவின் மேற்குக் கரையில் தலை மன்னார் ,

 

மன்னார் போன்ற பகுதிகளிலும் இதற்குத் தெற்கேயும் FRINGE REEF வகை பவளப்பாறைத் தீவுகள் காணப்படுகின்றன. அங்கே தூத்தக்குடி –இராமேஸ்வரம் பகுதியில் உள்ளது போன்ற அதே அமைப்பு. மேற்குக் கரையிலும் அதே; கிழக்குக்கரையிலும் அதே. இரண்டையும் இணைக்கும் இடைப்பட்ட பகுதியைப் பார்ப்போமா…
.
அதுதான் ஆதம் பாலம்.

தொடர்ந்து பேசுவோம் ……..

Comment here