பா.ஜா.க தலைவர் அண்ணாமலை அவர்கள்
மலையக மக்களை நேரில் சந்திப்பதானது
இருத்தரப்பிற்குமான உறவை
வலுப்படுத்துவதுடன்,இந்த காலக்கட்டத்தில்
எங்களுக்கான சக்தியாக அமைகிறது.
இந்தியாவில் அதிக வேகத்துடன் செயல்பட
கூடிய தலைவர்களில் ஒருவராக
அண்ணாமலை அவர்கள் செயற்படுகிறார்.
எங்கு பிரச்சினை நடந்தாலும் உடனடியாக
அங்கு சென்று குரல் கொடுத்து
அப்பிரச்சினைக்கான
உடனடி தீர்வை பெற்று
தரும் தலைவராவார். அவர் இலங்கைக்கு
வருகை தந்தமையானது அவருடைய
பரந்துப்பட்ட அரசியல் செயற்பாட்டை
வெளிப்படுத்துகிறது.
மேலும் இவருடைய வருகையினூடாக
மலையக மக்களுக்கு மேலதிக உதவிகளை
இந்திய அரசிடமிருந்து பெற்றுத்தரக் முடியும்
என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
நம்புகிறது.
எதிர்காலத்தில் இலங்கை தொழிலாளர்
காங்கிரஸ் இவருடன் இணைந்து இந்திய
அரசிடம் இருந்து மலையக மக்களுக்கான
தேவையான உதவிகளை பெற்று தருவதில்
முன்நின்று செயற்படும் என்பதோடு,
அவருடைய வேலைப்பளுக்கு மத்தியிலும்
இலங்கை வருகை தந்தமைக்காக இ.தொ.கா
சார்பாக நன்றிகளை தெரிவித்துக்
கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
– திரு. செந்தில் தொண்டைமான் அவர்கள். இலங்கை மலையகத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்.
இலங்கையில் அண்ணாமலை -இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இவருடன் இணைந்து இந்திய அரசிடம் இருந்து மக்களுக்கான உதவிகளை பெற்று தரும்

Related tags :
Comment here