இந்தியா

இலங்கையில் தாக்குதல் நடத்தியது இஸ்லாமிய அமைப்பு என அமைச்சர் தகவல்

Rate this post

இலங்கையில் முக்கியமான தேவாலயங்களை குறிவைத்து தாக்குதல் நடக்க உள்ளதாக இலங்கை காவல்துறை தலைவர் புஜுத் ஜெயசுந்தரா 10 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 11–ந் தேதி, உளவுத்துறை எச்சரிக்கையை அவர் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். அதில் ‘‘தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு, முக்கியமான தேவாலயங்களையும், கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்தையும் குறிவைத்து தற்கொலை தாக்குதல் நடத்த உள்ளதாக வெளிநாட்டு உளவு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு கடந்த ஆண்டு நடந்த புத்தர் சிலைகள் உடைப்பு மூலம் பலருக்கும் தெரிய வந்த இயக்கம் ஆகும்.

தாக்குதல் தொடர்பாக 3 உளவுத்துறை உள்ளீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது, ஆனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தோல்வி காரணமாக இந்த கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் தாக்குதல் நடத்தியது இஸ்லாமிய அமைப்பு என அந்நாட்டு அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

இலங்கை அமைச்சர் ரஜிதா சேனரத்னே கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “3 குண்டு வெடிப்பை நடத்திய பயங்கரவாதிகள் அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. இந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு பின்னால் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு உள்ளது என சந்தேகிக்கப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு நெட்வோர்க் உதவியின்றி இந்த தாக்குதலை நடத்தியிருக்க வாய்ப்பு இல்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.

Comment here