உலகம்

இலங்கை கடற்படையினர் கைது செய்த தமிழகம் – காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இன்று விடுதலை

Rate this post

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கதையாகி வருகிறது.

இந்நிலையில் கடந்த 7-ம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்த நாகை மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

மீனவர்கள் 12 பேர் இன்று விடுதலை

இதனையடுத்து அந்த 12 மீனவர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்பு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததையடுத்து 12 மீனவர்களும் இலங்கை திரிகோண மலை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். பின்பு 12 மீனவர்களையும் விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

Comment here