இல்லறம்

இல்லம் அழகுபடுத்த

வீட்டின் நுழைவு வாயிலின் வலது மூலையில், டெரகோட்டா உருளியிலோ அல்லது வெண்கலத்தில் சற்றே அகன்ற ஏந்தலான பாத்திரத்திலோ, தண்ணீர் நிரப்பி, சிறு பூக்களை அடர்த்தியாய் பரப்பி விடவும். இந்த மலர் அலங்காரம் பார்க்கும் போதே புத்துணர்வூட்டும் மனதிற்கு சக்தியையும் அளிக்கும்.
தரையில் வட்ட வடிவ கார்பெட் போடுவதால் சிறு ஹாலின் அழகு பரிணமிக்கும்.

சின்ன ஷோகேஸ் செய்து ஹால் சுவர் நடுவே அமைத்து அதில் அலங்கார பொருட்களை வைக்கலாம்.
உங்கள் ஹாலில் நுழைந்தவுடன் கண்ணில் படும் இடத்தில் சுவரில் இயற்கைக் காட்சிப்படமோ அல்லது குழந்தையின் படமோ மாட்டலாம். இரண்டு பெரிய விசிறிகளை (சிங்கப்பூரில் இது பிரபலம்) அரை வட்ட வடிவில் மாட்டினாலும் அழகாயிருக்கும்.

ஹாலின் டீபாய் மீது மடித்து வைத்த பேப்பர்கள், போன் அருகே சிரிக்கும் புத்தர் அல்லது பிள்ளையார் தாமிரத்திலான பொம்மை ஒன்றை வைக்கலாம். அல்லது மெழுகுவர்த்தியை ஸ்டாண்டுடன் வைக்கலாம்.

டைனிங் டேபிள் மீது சின்ன ப்ளவர் வேஸோ, அல்லது கட்லரி செட்டோ விருப்பப்படி ஒழுங்காய் அமைக்கலாம். டேபிளும் மடிக்கும் விதமாயிருந்தால் வசதியாய் இருக்கும். இடத்தை அடைக்காது.

சமையலறை அலமாரியில் ப்ளாஸ்டிக் டப்பாக்களை ஒரே நிறத்தில் சிறிதும் பெரிதுமாய் வாங்கி தேவையான சாமான்களை நிரப்புங்கள்.
மிக்சி க்ரைண்டருக்கு மேடை மூலையில் இடம் கொடுங்கள். க்ரைண்டருக்குக் கீழே புஷ் கொடுத்து விட்டால் அதை டேபிளீன் கீழே இழுத்துத் தள்ளி விடலாம்.
இன்பில்ட்காட் என்னும் மேற்புறம் திறந்தால் உள்ளே அதிக இடம் கொண்ட கட்டில்களை படுக்கை அறையில் போட்டு விட்டால் அதிகப்படி தலையணை போர்வைகளை அதில் ஒளிக்கலாம்.
சமையலறையின் வடகிழக்கு மூலைச் சுவரில் சிறு அலமாரி செய்து மணி அமைத்த தேக்குக்கதவோடு பூஜைக்கான இடம் அமைக்கலாம்.

Comment here