இல்லறம்

இல்லற வாழ்வில் கணவன்-மனைவி தாம்பத்திய உறவை வர்ணிக்கும் அருமையான கண்களில் நீரை வரவழைக்கும் வரிகள்…

Rate this post

❤ ஒரு கணவர் அவரது மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவத்தை எழுதுகிறார்…

❤ எழுபத்தைந்து வயதில்…..
ஆதரவு இன்றி நிக்குது மனசு…

❤ நாற்பதைந்து வருடம் – ஒரு நாளாவது அவளை கொண்டாடி இருக்கலாம்….

❤ என்
கோபத்தை தள்ளுபடி செய்து
ஒரு நாளாவது
அவளை கொண்டாடி இருக்கலாம்….

❤ அவள் சமையலை
ஒருமுறையாவது நான்
மனம் நிறைய பாராட்டி இருக்கலாம்…

❤ ஒரு நாளாவது
நான் சமையல் செய்து
அவளுக்கு ஊட்டி இருக்கலாம்…

❤ ஒரு நாளாவது
அவளுக்கு பதில் – நான்
அவளது துணியையும் சேர்த்து
துவைத்து இருக்கலாம்…

❤ ஒரு நாளாவது
TV யையும்,
Mobil லையும் அணைத்துவிட்டு,
அவளை கொஞ்சி இருக்கலாம்…

❤ ஒரு நாளாவது
வேலை தளத்தின்
கோபத்தையும்
எரிச்சலையும் அங்கேயே
விட்டு விட்டு வந்து இருக்கலாம்…

❤ ஒரு நாளாவது, என்
விடுமுறை நாட்களில் – அவளை
சினிமாவுக்கு அழைத்து
சென்று இருக்கலாம்…

❤ ஊர் ஊராய் சுற்றி அவளை
உற்சாகப்படுத்தி
இருக்கலாம்…

❤ அவள் விரும்பி
கேட்காத போதும் – ஒரு புடவை
வாங்கி கொடுத்து
இருக்கலாம்…

❤ ஒரு மாசமாவது− என்
முழு சம்பளப் பணத்தை
அவளிடமே கொடுத்து
இருக்கலாம்…

❤ ஒரு நாளாவது
காலையில் அலாரத்தை
கொஞ்சம் அணைத்து வைத்து
அவளை தூங்க விட்டு இருக்கலாம்…

❤ நீ சாப்பிட்டியா என்று அவளை
ஒரு நாளாவது கேட்டு இருக்கலாம்…

❤ நீயும் வா
என்னுடன் வந்து சாப்பிடு
என்று ஒரு நாளாவது சொல்லி இருக்கலாம்…

❤ அவள்
உடல் நலத்தைப் பற்றி ஒருமுறையாவது
விசாரித்து இருக்கலாம்…

❤ அவள்
தன்னை கவனிப்பதை விடுத்து
பிள்ளைகளை மட்டும்
கவனிப்பதை கண்டு
நான் கொஞ்சம் – அவளை
கவனித்து இருக்கலாம்…

❤ அவள்
நோயில் விழுந்த போது
நான் கடன் பட்டேனும் அவளை
காப்பாற்றி இருக்கலாம்…

❤ என்
தாயே!
தாரமே ! − நீ
என்னுடன் இருந்த போது
நான் கம்பீரமாய் வாழ்ந்தேன்…

❤ நீ
என்னை விட்டு போனதும்
நான் பலமுறை கால் தடுக்கி
விழுகிறேன்…

❤ என்னை
தூக்கி விடவும்
மூத்தவனுக்கு நேரம் இல்லை…

❤ தேனீர் ஏதாவது
போட்டுத்தரக் கேட்டால் இளையவளுக்கு
சினம் வருது…

❤ என் மனைவியே
உன்னை நான் தினமும்
கொண்டாடி இருக்க வேண்டும்…

❤ நான் தவறுகள்
இழைத்ததற்கு என்னை
நீ மன்னித்து விடு…

❤ ஒரு முழப் பூவாவது
ஒரு நாளாவது
உனக்கு வாங்கி தராதவன்
நான்…

❤ மூச்சு இழந்த – உன்
புகைப்படத்துக்கு
தினம் தினம் மாலை இட்டு
உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்…
மனைவியே!
என்னை மன்னித்து விடு…

❤ மீண்டும்
ஒரு பிறப்பு இருக்கும் என்றால்
நீயே என் மனைவியாய்
வந்து விடு…
நான் உன்னை கொண்டாட வேண்டும்…

❤ எழுபத்தைந்து வயதில்…
இந்த நிலை யாருக்கும் வராமலிருக்க….

❤❤❤ உங்கள் மனைவியை தினமும் நீங்கள் நேசியுங்கள்

❤❤❤ வாழ்க்கை வசந்தமாகும்

Comment here