அரசியல்

இளங்கோவனின் சகோதரர், ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்

                 தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் சகோதரர் இனியன் சம்பத், தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று அதிமுக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

ராயப்பேட்டையில் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இளங்கோவனின் சகோதரர் இனியன் சம்பத் உட்பட 11,967 பேர் அதிமுகவில் இணைந்தனர். இவர்கள் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அவர்களை வரவேற்று தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா உரையாற்றினார்.

Comment here