இல்லறம்

உங்கள் சமயலைறையில் சத்துக்கள் வீணாகமல் சமைப்பது எப்படி…

Rate this post
  1. காய்கறி சூப்பிற்கு காய்கறிகளில் தோல்களை நீக்காமல் உபயோகிக்க வேண்டும்.

  2. அளவாகத் தண்ணீர் வைத்து காய்கறி சமைக்க வேண்டும். மிகுதியான தண்ணீரை வீணாக்கக் கூடாது.

  3. வாயுத் தொல்லை, குடல் புண் உள்ளவர்களுக்கு துவரம் பருப்பு சாம்பாரைவிட பாசிப் பருப்பு சாம்பார் நலம் தரும்.

  4. கருணைக்கிழங்கு தவிர மற்ற கிழங்கு வகைகள் நன்மையைவிட அதிகம் கெடுதல் தரக் கூடியவை.

  5. வீட்டில் பழ சாறு செய்யும் போது வெள்ளைச் சர்க்கரை-க்குப் பதில் வெல்லம் அல்லது தேன் மட்டுமே சேர்க்க வேண்டும். ஏனெனில் வெள்ளைச் சர்க்கரை நல்ல உயிர்ச் சத்துக்களைச் கொல்லும் தன்மையுடையது.

  6. சமையலில் கூடியவரை அடுப்பை விட்டு இறக்கும் போது தேங்காய் சேர்க்க வேண்டும்.

  7. காய்கறிகளை எண்ணெயில் பொரிப்பது மற்றும் வதக்குவதைவிட நீரில் அல்லது நீராவியில் வேக வைப்பது நலம்.

  8. இரவில் கண்டிப்பாகத் தயிரும், கீரையும் சாப்பாட்டில் சேர்க்கக் கூடாது.

  9. நறுக்கியவுடன் காய்கறிகளைச் சமைத்துவிட வேண்டும். அதேபோல பழங்களை நறுக்கியவுடன் சாப்பிட்டுவிட வேண்டும்.

Comment here