Sliderஆன்மிகம்

உஜ்ஜைனி மகாகாளி

Rate this post

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜைனி மகாகாளி கோயில் மிகவும் பிரபலமானது. உஜ்ஜைனி மகாகாளி மன்னன் விக்ரமாதித்தனுக்கும் மகாகவி காளிதாசனுக்கும் தரிசனம் கொடுத்து அவர்களை ஆசீர்வதித்தார். இத்திருக்கோயிலில் இரண்டு தீப தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணிலும் 1001 விளக்குகள் உள்ளன. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக் கோயிலில் இப்போதும் தினமும் மாலை நேரத்தில் ஆரத்தி செய்யும்போது 2002 விளக்குகளும் ஏற்றப்படுகின்றன. பூசாரிகள் வாயு வேகம் மனோ வேகம் என்று சொல்வது போல் மிக வேகமாக படிகளில் ஏறி முதல் நாள் எரிந்து மீதம் உள்ள திரி, அழுக்கு போன்றவற்றை அப்புறப்படுத்தி தூய்மை படுத்துகிறார்கள். எண்ணெய் ஊற்றி பெரிய திரிகளை வைத்து தீப்பந்தங்களைக் கொண்டு விளக்கு ஏற்றுகிறார்கள். ஏறிய வேகத்திலேயே இறங்கி வருகிறார்கள். இந்த அற்புத விளக்கொளி காட்சியைக் கண்டு மகிழ்வோம்.
👇👇👇👇

Comment here