வாழ்க்கை நலன்

உடலை பற்றி அறிந்து கொள்ளுங்கள்

பரிணாம வளர்ச்சிச் சங்கிலியில் இறுதியாக மனிதர்கள் வருகிறார்கள். எனவேதான் அவர்கள் அனைத்து உயிர் அமைப்புகளிலும் மிகவும் சிக்கலானவர்கள். உடல் உறுப்புகளின் எண்ணிக்கை, அவை செயல்படும் முறை, அவர்களுக் கிடையேயான ஒருங்கிணைவு ஆகியவை மிகத் துல்லியமாக மற்றும் விரிவாக இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளன. உங்கள் மாணவர்களை இந்த கட்டுரை மூலம் அவர்களின் உடல்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கான பயணத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். இந்த கட்டுரையில் உள்ள பல பயிற்சிகள் எலும்புகள் மற்றும் புலனுறுப்புகளைப் பற்றியவையாகும். ஆனால் தசைகள், நரம்புகள், போன்றவற்றை பற்றித் தெரிந்து கொள்ள இது போன்ற பயிற்சிகளிலும் ஈடுபடலாம்.

உடலின் பல்வேறு உறுப்புகளை அடையாளம் காண்பது.
மற்ற உயிர் வடிவங்களுடன் மனித உடலை ஒப்பிடுவது மற்றும் வேறுபடுத்துவது.
மனித உடலின் செயல்பாடுகளை குழந்தையின் இருப்பிடச் சூழலில் வாழும் மற்ற பிராணிகளின் உடல்களுடன் ஒப்பிடுவது.
ஐந்து பல்வேறு புலன்களின் பெயர்களை குறிப்பிடுவது மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வது.

மனித உடல் தனியாக, குழந்தைகள் அவர்களின் சுற்றுச்சூழலில் சந்திக்கக்கூடிய மற்ற பொருட்கள் அல்லது சூழ்நிலைகளுடன் தொடர்புபடுத்தாமல் கற்றுக் கொடுக்கப்பட வேண்டியதாகும். உடல் குழந்தையின் உடனடி அனுபவத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், அறிவியல் பாடத்திட்டத்தின் பரிமாணங்களைத் தாண்டி அதன் புரிந்துக் கொள்ளலை நீட்டிப்பது அவசியம்.

மனித உடலின் படத்தை மாட்டி, குழந்தைகளுக்குத் தெரிந்த உடல் உறுப்புகளை அடையாளம் கண்டு, அவற்றை ஒரு அட்டவணையில் பட்டியலிடுமாறு அவர்களிடம் கூறுங்கள்.

பயிற்சியை மேலும் சுவாரஸ்யமானதாக்க, மூக்கு, கண்கள் மற்றும் கைகள் போன்ற உடலின் சில உறுப்புகளின் படங்களை கனசதுரத்தின் நான்கு பக்கங்களில் ஒட்டுங்கள். கனசதுரத்தை சுழற்றி, கனசதுரத்தில் மேலே இருக்கும் உறுப்பை அடையாளம் காட்டச் சொல்லுங்கள். கனசதுரம் இல்லையென்றால் சிறிய, சதுர பெட்டியைப் பயன்படுத்தலாம். நீங்கள் உடலின் பல்வேறு உறுப்புகளை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த “சைமன் கூறுகிறான் ” விளையாட்டை விளையாடலாம்.

குழந்தைகளிடம் “ ஏன் பாம்பால் நம்மை போல் நிற்கவோ அல்லது நடக்கவோ முடியாது? அல்லது நாய்கள் ஏன் நான்கு கால்களில் நடக்கின்றன? ” என்பது போன்ற கேள்விகளை கேளுங்கள்.

ஆசிரியருக்கான குறிப்பு: எலும்புகள் பற்றிய தலைப்பை இங்கு அறிமுகம் செய்யுங்கள்.

எலும்புகள் எதனால் ஆனது?

மனித உடல் எத்தனை எலும்புகளால் ஆனது?

எலும்புகள் நம் உடல்களைத் தாங்கி, அவற்றை பிடித்துக் கொண்டுள்ளன ?

இந்த விவரங்களை குழந்தைகளிடம் கூறுங்கள்.

எலும்புகள் இல்லையென்றால் நாம் வடிவமில்லாதவர்களாக இருந்திருப்போம். நம் உடல்களுக்கான கட்டமைப்பாக செயல்படுவதோடு, எலும்புகள் நம் உறுப்புகளைப் பாதுகாக்கும் செயலையும் மேற்கொள்கிறது. குழந்தைகளால் இவைகளுக்கான காரணங்களைக் கூற முடியுமா?

குழந்தைகளிடம் எலும்புகள் இல்லை என்று அவர்கள் நினைக்கும் விலங்குகளைப் பட்டியலிட சொல்லுங்கள்.

குழந்தைகளிடம் “ஒரு நாயால் ஒரு பென்சிலை பிடித்துக் கொள்ள முடியுமா?” என்று கேளுங்கள். “ஏன் முடியாது?” என்றும் கேளுங்கள்.

ஆசிரியருக்கான குறிப்பு: இங்கு குழந்தைகளிடம் மூட்டு பற்றி கூறுங்கள். அவர்களுக்கு மனித உடலில் உள்ள பல்வேறு மூட்டுகளை காட்டி, அவற்றின் பெயர்களை கூறுங்கள். இந்த பயிற்சியின் மூலம், மூட்டுகள் என்பவை எலும்புகள் சந்திக்கும் இடங்கள் என்பதை குழந்தைகளுக்குக் கூறி, அவைகளை கண்டுபிடிக்க செய்யுங்கள். குழந்தைகள் அவர்களின் கால் முட்டிகள் அல்லது கை முட்டிகளை மடக்காமல் நகரும் எளிய உடற்பயிற்சியை செய்ய வேண்டும் அல்லது அவர்கள் கீழே அமர்ந்து, மீண்டும் எழுந்து நிற்க முயற்சி செய்யலாம். விறைப்பான கால் முட்டிகள் அல்லது கை முட்டிகளுடன் நகர்வது அல்லது எழுந்து நிற்பது எவ்வளவு கடினம் அல்லது சுலபம் என்பதை குழந்தைகளை அறியச் செய்யவும்.

உடலின் மூட்டுகளாக அமைந்த சில எலும்புகளை வரையுங்கள். கதவு இயங்கும் விதம் போன்ற நன்றாகத் தெரிந்த உதாரணத்தில் அவர்களின் கவனத்தை ஈர்ப்பதன் மூலம் அவை செயல்படும் விதத்தை விவரியுங்கள்.

எலும்புக்கூடின் படம் அல்லது எலும்புக்கூடின் மாதிரியை வகுப்பிற்கு கொண்டு வாருங்கள். இது போன்ற படம் குழந்தைகளுக்கு எலும்புக்கூடுகள் பற்றி இருக்கும் பயத்திலிருந்து மீள அவர்களுக்கு உதவும். முடிந்தால், பல்வேறு உயிர் வடிவ தொல்லுயிர்ப் புதை படிவுகளைக் கொண்ட அருங்காட்சியகத்திற்குச் செல்ல ஏற்பாடு செய்யலாம்.

”உனக்கு விரல் எலும்புகள் இல்லையென்றால் என்னவாகும்?” அல்லது “உனக்கு முதுகெலும்பு இல்லையென்றால் என்னவாகும்?” அல்லது “உனக்கு எலும்புகளே இல்லையென்றால் என்னவாகும்?” (நமக்கு எலும்பில்லாத உடல் இருக்கலாமா?) என்பது போன்ற “என்னவாகும்” கேள்விகளுக்கான பதில்களை கூறச் செய்யுங்கள். குழந்தைகள் எலும்புகளை வலிமையாக வைத்திருக்க உதவ, பால், காய்கறிகள், மற்றும் பழம் போன்ற ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டுமென்று அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

ஆசிரியருக்கான குறிப்பு: குழந்தைகளை அசையாமல் அமர்ந்து, அவர்களின் இதயத் துடிப்பை உணரச் சொல்லுங்கள். இதனைத் தொடர்ந்து அவர்களை குதிக்கச் சொல்லுங்கள். அவர்களை மீண்டும் இதயத் துடிப்பை உணரச் சொல்லுங்கள். அவர்களால் வித்தியாசத்தை உணர முடிந்ததா? இதற்கான காரணம் என்ன?

நிறுத்தற் கடிகாரத்தைப் பயன்படுத்தி மாணவர்களிடம் “இதயம் ஒரு நிமிடத்திற்கு 72 முறை துடிக்கும்” என்று கூறுங்கள்.

கண்ணாமூச்சி விளையாட்டுகள் போன்ற விளையாட்டுகள் மூலம் புலனுறுப்புகளை அறிமுகம் செய்யலாம்.

குழந்தைகளை பதினைந்து நிமிடங்களுக்கு கண் தெரியாதவர்கள் போல் நடிக்க சொல்லுங்கள். கண்கள் இல்லையென்றால் நம் வாழ்க்கை எப்படி இருக்கும்? எனக்கேட்டு குழந்தைகளை கவனிக்க அனுமதியுங்கள்.

கண் தெரியாதவர்களின் பிரச்னைகளை அவர்களுக்கு உணர்த்துங்கள்.

கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடி, உருவாகும் பல்வேறு ஒலிகள் எங்கிருந்து உருவாகின்றன என்று யூகிக்கச் சொல்லுங்கள். அவர்களிடம் “எங்கிருந்து ஒலி வருகிறது?” என்று சுட்டிக்காட்ட சொல்லுங்கள். “ஒரு காதில் ஒலியை கேட்பதைவிட இரண்டு காதுகளில் ஒலியை கேட்பது சிறந்ததா?” என்று கேளுங்கள்.

ஒரு குவளையில் சிறிது தண்ணீர் நிரப்பி, விளிம்பை பென்சிலால் தட்டுங்கள். அதே பென்சிலை எடுத்து மேஜை மீது பலமாக அடியுங்கள். “உருவான ஒலிகளில் உள்ள வேறுபாட்டை குழந்தைகளால் கண்டுபிடிக்க முடிகிறதா?” என்று அவர்களிடம் கேளுங்கள்.

குழந்தைகளை அவர்களின் உடல்கள் உருவாக்கும் பல்வேறு ஒலிகளை அடையாளம் காணச் செய்யுங்கள் – சுவாசிக்கும் ஒலி, வயிற்றில் ஏற்படும் சத்தம், இதயத் துடிப்பு, போன்றவைகள்.

கண்ணாமூச்சி விளையாட்டை மீண்டும் விளையாடி, சர்க்கரை, மிளகு, எலுமிச்சை போன்ற சில பொருட்கள் மற்றும் வாழைப்பழம், ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு போன்ற சில பழத் துண்டுகளையும் சுவைக்கச் சொல்லுங்கள். குழந்தைகளால் அந்த பொருட்களை கண்டுபிடிக்க முடிகிறதா? குழந்தைகளிடம் “நம் நாக்கு எப்படி உணவைச் சுவைக்க நமக்கு உதவுகிறது?” என்பதை விளக்குங்கள்.

குழந்தைகளிடம் கண்களை மூடிக் கொள்ளச் சொல்லுங்கள். அவர்களின் விரல் நுனியை கொண்டை ஊசியின் இரு முனைகளால் மிக இலேசாகக் குத்துங்கள். “அவர்கள் ஊசியின் ஒரு முனை குத்தியதை உணர்ந்தார்களா? அல்லது இரண்டு முனைகள் குத்தியதையும் உணர்ந்தார்களா?” என்று கேளுங்கள்.

குழந்தைகளிடம் “அவர்களுக்கு எங்கு அதிகம் கூச்சமாக உள்ளது?” என்று கேளுங்கள்.

“விலங்குகளுக்கு கூச்சம் இருக்குமா?” என்பதற்கான விடையினை குழந்தைகளை யூகிக்க சொல்லுங்கள்.

நாம் இஸ்திரிப் பெட்டியைத் தொட்டால் அல்லது நாம் ஐஸை தொட்டால் என்னவாகும்? – மாணவர்களை இவைகளுக்கான விடைகளைக் கூறச் செய்யுங்கள்.

நம்முடைய சருமம் வெளியிலிருந்து புலனுணர்வை கண்டுபிடிக்க செய்கிறது. இதில் கண்ணுக்குத் தெரியாத பல கிருமிகள் இருக்கும். குழந்தைகள் அவர்களின் சருமத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம் என்று அவர்களுக்கு கற்பியுங்கள்.

நம் மூக்கு நாம் சுவாசிக்க உதவுகிறது, இது நாம் நுகரவும் உதவுகிறது. நல்ல மணத்தைக் கொண்டுள்ள சில பொருட்களின் பெயரையும், துர்நாற்றத்தை கொண்டுள்ள சில பொருட்களின் பெயரையும் கூறச் சொல்லுங்கள்.

உங்களுக்கு ஜலதோஷம் இருக்கும்போது உங்களால் நுகர முடியுமா? – குழந்தைகளிடம் “அவர்களால் இதற்கான காரணங்களை கண்டுபிடிக்க முடியுமா?” என்று கேளுங்கள்.

குழந்தையிலிருந்து பெரியவராக வளரும் ஒருவரின் வளர்ச்சியை விவரிக்க வகுப்பிற்கு புகைப்பட ஆல்பங்களை கொண்டுவாருங்கள். குழந்தைகளை அவர்களின் தற்போதைய புகைப்படங்களை குழந்தைகளாக இருக்கும் போது எடுத்த அவர்களின் புகைப்படங்களுடன் ஒப்பிடச் சொல்லுங்கள்.

குழந்தைகளிடம் அவர்கள் பார்ப்பதற்கு யாரைப்போல் ஒத்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கச் சொல்லலாம் – அவர்களின் தாயையா அல்லது அவர்களின் தந்தையையா? அவர்களின் சகோதரிகள் அல்லது சகோதரிகளைப் போல் பேசும் விதம் மற்றும் நடக்கும் விதம் போன்ற ஒரே இயல்புகளைக் கொண்டுள்ளார்களா?

Comment here