உலகம்பொது

உணவகத்தில் பணிபுரியும் கவர்னரின் மனைவி

அகஸ்டா :

அமெரிக்காவில், மாகாண கவர்னர் ஒருவரின் மனைவி, குடும்ப செலவுகளை சமாளிக்க, உணவகத்தில் சர்வராக பணிபுரியும் தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் மேய்ன் மாகாண கவர்னர் பால் லோபஸ்; அகஸ்டாவில் உள்ள கவர்னர் மாளிகையில், மனைவியுடன் வசித்து வருகிறார். இவரது ஆண்டு வருமானம், 47 லட்சம் ரூபாய்; இது, மற்ற மாகாண கவர்னர்களின் வருமானத்துடன் ஒப்பிடும்போது, மிகவும் குறைவு.

குறைந்த வருமானத்தில் குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாத அவரது மனைவி ஆன் லோபஸ், உணவகம் ஒன்றில் சர்வராக பணியில் சேர்ந்தார். வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் பணிபுரியும் இவர், தன்னுடைய பணி நேரத்தை அதிகரிக்கும்படி உணவக உரிமையாளரிடம் கோரியுள்ளார்.

இதுகுறித்து ஆன் லோபஸ் கூறியதாவது: உணவகத்தில் என்னை பார்த்த வாடிக்கையாளர்கள், கவர்னரின் மனைவியைப் போல் இருப்பதாக, தங்களுக்குள் முணுமுணுத்தனர். உண்மை தெரிந்ததும், வேலைக்கு வந்ததற்கான காரணத்தை கேட்டறிந்து, மகிழ்ச்சியுடன் உணவருந்தி செல்கின்றனர். அவர்கள் அளிக்கும், ‘டிப்ஸை’ சேமித்து, கார் வாங்க முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Comment here