பொது

உணவுக்கும் மாதவிடாய் நிற்கும் வயதுக்கும் தொடர்புண்டா?

கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது மாதவிடாயை முன் கூட்டி நிறுத்தலாம் என ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.
படத்தின் காப்புரிமை Getty Images

பாஸ்தா மற்றும் அரிசியை அதிகளவு உட்கொள்ளுவது பிரிட்டனில் பெண்களுக்கு மாதவிடாய் நின்றுபோகும் சராசரி வயதான 51ஐ விட ஒன்றரை வருடம் முன்கூட்டி நின்றுபோவதுடன் தொடர்புடையதாக உள்ளது.

914 பிரிட்டன் பெண்மணிகளை சோதித்த லீட்ஸ் பல்கலைகழகம், எண்ணெய் மீன்கள், பட்டாணி, பீன்ஸ் போன்றவற்றை பிரதானமாக உட்கொள்ளுபவர்களுக்கு இயற்கையான மாதவிடாய் நிறுத்தம் தள்ளிப்போவதாக கண்டறிந்துள்ளது.

ஆனால், ஜீன்கள் உள்ளிட்ட வேறு பல காரணிகளும் மாதவிடாய் நிறுத்த நேரத்தை முடிவு செய்வதில் ஆதிக்கம் செலுத்துகின்றன என நிபுணர்கள் கூறுகின்றனர்.

உணவு இதில் எவ்வளவு தூரம் பங்களிக்கிறது என தெளிவாக தெரியவில்லை ஆகவே தற்போதைய கண்டுபிடிப்புகள் அடிப்படையில் பெண்கள் தற்போதைய உணவு பழக்கத்தை முற்றிலுமாக மாற்ற வேண்டுமா என கவலைகொள்ளத் தேவையில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உணவு கண்டுபிடிப்புகள்

இந்த ஆராய்ச்சிகள் கொள்ளை நோயியல் மற்றும் சமூக ஆரோக்கியத்துக்கான ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. பெண்களிடம் அவர்கள் பொதுவாக என்னவிதமான உணவுகளை உட்கொள்ளுவார்கள் என கேட்கப்பட்டிருந்தன.

பருப்பு வகைகளான பட்டாணி, பீன்ஸ், பயறு வகைகள், சுண்டல் ஆகியாயவை மாதவிடாய் நிறுத்தத்தை சராசரசியாக ஒன்றரை வருடம் தள்ளிப்போடுகின்றன.

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளில், குறிப்பாக அரிசி மற்றும் பாஸ்தா அதிகம் உண்ணுபவர்களுக்கு சராசரியாக ஒன்றரை வருடம் முன் கூட்டியே மாதவிடாய் நிறுத்தம் நடைபெறுகிறது.

மாதவிடாய் நிறுத்தத்தில் பங்கு வகிக்கும் மற்ற காரணிகளான பெண்களின் எடை, இனப்பெருக்க வரலாறு, ஹார்மோன் மாற்று தெரப்பி போன்ற விஷயங்களையும் ஆராய்ச்சியாளர்கள் கணக்கில் எடுத்துக்கொண்டனர். ஆனால் மரபியல் காரணங்களை அவர்களால் கருத்தில் கொள்ளமுடியவில்லை.
படத்தின் காப்புரிமை Getty Images

இந்த ஆய்வு கவனத்தில் எடுத்துக்கொள்ளவே செய்யப்பட்டது. எந்த காரணத்தை கொண்டும் தற்போது நிரூபிக்க இயலாது. ஆனால் தங்களின் கண்டுபிடிப்புகளுக்கு பின்னுள்ள சில சாத்தியமான விளக்கங்களை வழங்கியுள்ளனர்.

உதாரணமாக, பருப்பு வகைககளில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் உள்ளன. இவை மாதவிடாயை நீண்டகாலத்துக்கு தக்கவைக்கும்.

ஒமேகா-3 ஃபேட்டி அமிலங்கள் எண்ணெய் மீன்களில் மட்டுமே உள்ளன. இவை உடலில் ஆன்டி ஆக்சிடன்ட் சேகரிக்கும் அளவை தூண்டுவிடுகின்றது.

சுத்தீகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் இன்சுலின் எதிர்ப்புக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. இவை செக்ஸ் ஹார்மோனின் செயல்பாட்டில் தலையிடுகிறது மேலும் ஈஸ்ட்ரோஜென் அளவுகளையும் அதிகரிக்கின்றன. இதனால் மாதவிடாய் சுழற்சி அதிகரித்து முட்டை வெளியிடுதல் விரைவாக நடக்கிறது.

உடல்நல தாக்கங்கள்

ஊட்டச்சத்து கொள்ளை நோயியல் பேராசிரியரும் துணை ஆய்வாளருமான ஜேனட் கேட், மாதவிடாய் நின்று போகத் துவங்கும் நேரத்தில் சில பெண்களுக்கு கடுமையாக ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்கிறார்.

”ஏற்கனவே ஆபத்தில் இருப்பவர்களுக்கும், மாதவிடாய் நிறுத்தம் தொடர்பாக சில சிக்கல்களை சந்தித்திருக்கும் குடும்ப வரலாற்றை கொண்டிருக்கும் நபர்களுக்கும் உணவு எப்படி இயற்கையான மாதவிடாய் நிறுத்தத்தில் பங்கு வகிக்கிறது என்பது பற்றிய தெளிவான புரிதல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்கிறார்.

மாதவிடாய் நிறுத்தம் விரைவில் நடக்கும் பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புப்புரை மற்றும் இதய நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. மாதவிடாய் நிறுத்தம் தள்ளிப்போனால் மார்பகம், கருப்பை மற்றும் சினைப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

மாதவிடாய் சிறப்பு செவிலியர் மற்றும் பிரிட்டிஷ் மாதவிடாய் அமைப்பின் தலைவி கேதி அபர்நெதி கூறுகையில் ” உணவுகளுடன் இருக்கும் தொடர்பு குறித்து இந்த ஆய்வு எதுவும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் நமக்கு ஏன் சில பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்தம் முன்கூட்டியும், தள்ளிப்போயும் நடக்கிறது என்பதை பற்றி சற்று புரிந்துகொள்ள இந்த ஆய்வு பங்களிக்கிறது” என்றார்.
படத்தின் காப்புரிமை Getty Images

ஓய்வுபெற்ற உட்சுரப்பியல் பேராசிரியர் சாஃபிரான் வொயிட்ஹெட் ” மாதவிடாய் நிறுத்தகாலத்துக்கான காரணம் குறித்து அறியமுற்படும் சுவாரஸ்யமான ஒரு அணுகுமுறை இது. ஆனால் மாதவிடாய் நிறுத்தத்திற்கு உணவு மட்டும் காரணம் என முழுமையாக நான் நம்பவில்லை. வெறும் சில காரணிகளும் இதில் தொடர்புடையது” என்றார்

”உடலின் வளர்சிதை மாற்றமானது முட்டை வெளியிடுதல் மற்றும் மாதவிடாயை ஒழுங்குபடுத்துவது ஆகியவற்றில் முக்கியமான பங்கு வகிக்கிறது” என்றார் இம்பீரியல் கல்லூரியின் ஆண் உறுப்பு நோயியல் மற்றும் இனப்பெருக்க உட்சுரப்பியில் ஆலோசகரும், மூத்த பேராசிரியருமான டாக்டர் சன்னா ஜயசேனா.

” இது போன்ற ‘கவனிக்கும்’ ஆய்வுகளில் மாதவிடாய் நிறுத்தம் முன்கூட்டி முடிவதற்கான காரணங்களை முழுமையாக நிரூபிக்கமுடியாமையே மிகப்பெரிய துரதிர்ஷ்டம். ஆகவே முழுமையாக நிரூபிக்கப்படும் வகையில் மக்கள் அவர்களது உணவு முறையை மாற்றத் தேவைப்படுவதற்கான எந்த காரணத்தையும் நான் பார்க்கவில்லை ” என்கிறார் சன்னா ஜயசேனா.

Comment here