இந்தியா

உயர்தர வசதிகள் கொண்ட கிராமம்

பன்சாரி கிராமம் குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த சிறிய கிராமத்தில் இலவச வைஃபை, சிசிடிவி கேமராக்கள், ஏசி வசதியுடன் கூடிய பள்ளிகள், தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைகள், பயோமெட்ரிக் இயந்திரங்கள் போன்ற வசதிகள் உள்ளது. மெட்ரோ நகரங்கள்கூட வெட்கப்படும் அளவிற்கு இங்கு உயர்தர வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. பன்சாரியில் இரண்டு ஆரம்பப் பள்ளிகள், ஆரம்ப சுகாதார மையம், முறையான சாலை விளக்குகள், சிறப்பாக செயல்பட்டு வரும் வடிகால் அமைப்பு ஆகியவை உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை வசதி உள்ளது. இவை அனைத்தும் 23 வயதில் கிராமத்தின் தலைவராக ஆன ஹிமான்ஷு படேல் அவர்களால் சாத்தியமாயிற்று. நார்த் குஜராத் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இவர் அரசாங்க திட்டங்கள் தனது கிராமத்தில் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்தார். கல்வி, சுகாதாரம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தினார். அப்போதிருந்து இந்த கிராமத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டன.

Comment here