உயர்நீதி நீதிபதியாக பணிபுரிந்த நீதிபதி செல்வம் தற்போது விவசாயி!

Rate this post

13 ஆண்டுகளாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்த நீதிபதி செல்வம் தற்போது விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நீதிபதி செல்வம், கடந்த 1981ம் ஆண்டு வழக்குரைஞராகப் பதிவு செய்தார். கடந்த 1986-இல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற அவர், 1997ம் ஆண்டு மாவட்ட நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். இதையடுத்து 2006 -ம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 12 ஆண்டுகளாக நீதிபதியாக பதவி வகித்த அவர் பல குற்ற வழக்குகளில் முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார். கடந்த ஏப்ரல் 4 – ம் தேதி தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

இவர் பதவியிலிருந்த போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கருவேல மரத்தை அகற்ற உத்தரவிட்டதோடு மட்டுமின்றி கருவேல மரங்களை முற்றிலும் அகற்றும் பணிகளுக்காக ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கி, அதற்கென தனி வங்கி கணக்கையும் தொடங்கிவைத்தார்.

மேலும் தான் பணியில் இருக்கும் போதே, சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, கழிவு நீர் கால்வாய்களை கட்டாமலும் அவசர கதியல் சாலை அமைப்பதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து அதே நாளில் தீர்வை பெற்றவர். நீதிபதியே தான் பணியாற்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்வு பெற்றது என்பது நீதிதுறை வரலாற்றிலேயே முதன்முறை என்பது கூடுதல் சிறப்பு.

சுற்றுச்சூழல் சார்ந்த வழக்குகளில் அதிக கவனத்துடன் செயல்பட்ட நீதிபதி ஏ.செல்வம் தன்னுடைய ஓய்வு காலத்தை விவசாயத்திற்காக செலவிட்டு இன்றைய தலைமுறைக்கு முன்னுதாரணமாக செயல்பட்டு வருகிறார்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*