பொது

உருளைக்கிழங்கில் அப்படி என்ன இருக்கிறது?

ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று வேளை உருளைக்கிழங்குகளை உணவில் சேர்த்துகொள்வதால் உடல் எடை அதிகரிப்பதில்லை, மேலும் ஓட்ஸ் போன்ற உணவுகளை சாப்பிடும் போது ஏற்படும் அளவுக்கு ரத்த அழுத்தம் குறைகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அமேரிக்காவைச்சேர்ந்த ஜோய் வின்சன் என்ற நிபுணர் தலைமையிலான குழு இதுதொடர்பான ஆய்வை நடத்தியது.
இந்த ஆய்வுக்காக கருஞ்சிவப்பு நிற உருளைக்கிழங்கை பயன்படுத்தினார்கள். எண்ணை இன்றி மைக்ரோவேவ் அடுப்பு மூலம் சமைத்தனர். இதை ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற பாதிபுள்ள நபர்களுக்கு கொடுத்தனர். தினமும் 2 வீதம் 2 மாதகாலம் இந்த உருளைக்கிழங்கை கொடுத்து வந்தனர்.
பிறகு அவர்களின் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அப்போது அவர்களின் ரத்த அழுத்தம் குறைந்திருந்தது, அத்துடன் அவர்களில் யாருக்கும் உடல் எடை அதிகரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Comment here