Sliderஉலகம்

உலகச் சித்தர்கள் தின சிறப்பு விழா 2019

உலகச் சித்தர்கள் தின சிறப்பு விழா சிறப்புடன் நடைபெற்றது .இதில் சிறப்பு என்ன வென்றால் மாலை 4.30 மணிக்கு துவங்கிய விழாஇரவு பத்துமணி வரை நடந்தபோதும் அரங்கம் நிரம்பிய கூட்டம் .கலைப்படையாத ,சற்றும் கலையாத இத்தகையக்கூட்டத்தை அண்மையில் கண்டதில்லை என்று பலரும் வியந்தனர் .ஞானந்தா ஸ்வாமிகள் ,ஒரிசா பாலு ,இளமதி ஜானகி ராமன் உள்ளிட்ட பலரின் சிறப்பான பேச்சே இதற்குக்காரணம் கூடிய சபையும் அறிவார்ந்த சபை இத்தகைய சுவை நாடி வந்த திருக்கூட்டம் .

எனக்கு மட்டும் மனதில் ஒரு குறை இருந்தது , சென்ற ஆண்டு நடந்த இத்தகையக்கூட்டத்தில் ஒரு முழுநாளும் சரளமாக பேசி கழித்த என்னால் இந்த ஆண்டு முழுமையாக பேச இயலாமல் ஆரம்பத்திலேயே பேசும் போது மூச்சுத்திணறல் வந்துவிட்டது . வார்த்தைகளுக்குப்பதிலாக வாயுதான் வெளிவந்தது .அப்போதுதான் தற்போதைய உடல்நிலையை முழுமையாக உணர முடிந்தது . எனினும் நான் விடுவதாக இல்லை இனி சில விதிகள் செய்வோம் .
அடுத்த ஆண்டு இத்தகைய விழாவுக்குள் சரளமாக பேசும் ஆற்றல் பெற உடலை இருக்கவேண்டும் .இப்போது தவறு எங்கே என்றது தெரிந்துவிட்டது இனி இதை திருத்துவது சுலமாமே என்று எண்ணுகிறேன் .

நிறைய பேச குறிப்புகள் பல தயார் செய்த்து போனேன் ஆனால் அதையும் பார்த்துப்படிக்கஎனது கண்களும் சரியாகத்தெரியவில்லை .தேர்தலுக்கு பின் கண்ணை சரியாகும் என்று தேர்த்திக்கொண்டேன் .

வருகை புரிந்த நண்பர்களும் அத்துணை பேருக்கும் நன்றி !

பேச இயலாத பேச்சு என்ற தலைப்பில் நான்

பேச இயலாத பேச்சு -1

அனைவருக்கும் வணக்கம் சொல்லி எனது உரையை ஆரபிக்க எண்ணுகிறேன் .அதைவிட பெரும் திரளாக கூடியிருக்கும் நண்பர்களுக்கும் எனது நன்றியையும் புத்தாண்டு வாழ்த்தையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் .
எனக்குத்தரப்பட்டுள்ள தலைப்பு தமிழ் சித்தர்கள் கூறிய
செய்திகளும் அவர்தம் பெருமையும் ஆகும் .

உண்மையாக சொல்லப்போனால் l சித்தர்கள் எனும் சொல் சங்க இலக்கியத்திலோ அல்லது தொலகாப்பியத்திலோ
எங்கும் காணப்படவில்லை அதற்க்கு இணையான அறிவர் எனும் சொல் தொலகாப்பியத்தில் வழக்கில் உள்ளது அதற்க்கு நச்சினார்க்கினியனும் ILAMPOORANAR பல்வேறு விதமாகப்பொருள் கூறியிருக்கின்றனர்
.சொல் இல்லை என்பதினால் அந்தக்காலத்தில் சித்தர்கள் என்பவர்களே இல்லை என்றும் ஆகிவிடாது .
கி மு 300 முதல் கிபி 300 வரை சங்ககாலம் என்று அழைக்கப்படுகிறதுஆனால் அதற்க்கு மிக நீண்ட காலத்திற்கு முன்பே
தமிழ் சித்தர்களில் முதன்மையான
அகத்தியரைப்பற்றியக்குறிப்பு இராமன் தொழுத அகத்தியரை வால்மீகி இராமாயணம் குறிப்பிடுகிறது.வால்மீகியும் தமிழ் சித்தர் மரபில் வைத்து எனப்படுகிறார் வான்மீகி நாதர் என்ற பெயரிலே அவரது அடக்க இடம் எட்டுக்குடியில் இருக்கிறது
எட்டுக்கும் இரண்டிற்கும் விளக்கம் சொனனதால் எட்டு என்று பெயர்பெற்றதா ?
பாரதத்தில் பேசப்படும் கண்ணபிரானைச் சந்தித்து
பதினெண்குடி வேளிரையும் துவாரகையிலிருந்து தமிழ் நாட்டிற்கு அகத்தியர் அழைத்து வந்ததாக நச்சினார்கினியர் குறிப்பிடுகிறார்.
சிலப்பதிகாரம், – மணிமேகலை, – பரிபாடல்களிலும்
அகத்தியரைப் பற்றிய குறிப்புகள் இடம் பெறுகின்றன.
அவரின் படைப்பான பாடல்கள் இவைகளில் இடம்
பெறாவிட்டாலும் அவரைப்பற்றிய குறிப்பு இலக்கியங்களில் அதிகமாகவே இருக்கிறது
வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கும் திருப்பு முனை செய்திகளைத்தெரிவித்த
வேள்விக்குடி சின்னமனூர்ச் செப்பேட்டில் பாண்டிய
குலகுரு அகத்தியர் என்று குறிப்புள்ளது

நரசிம்ம பல்லவர் சாளுக்கிய வாதாபியை வென்றதை கூறும் கல்வெட்டு அகத்தியர் வாதாபி எனும் அரக்கனை அழித்ததுபோல் நரசிம்மர் வாதாபியை அழித்தார் என்று குறிப்பிடுகிறது .அப்போது அந்த காலகட்டத்தில் அகத்தியர் வரலாறு மக்களிடையே பிரபலமாக இருந்திருக்கிறது என்பதை உணரலாம் .

சங்ககாலத்திற்குப்பிறகு 10 நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட பன்னிருதிருமுறைகளில் பத்தாம் திருமுறையாக திருமந்திரம் தொகுக்கப்பட்டிருக்கிறதுவரலாற்றில் முதல் முறையாக தொகுக்கப்பட்ட முதன் மறை என்று அதை சொல்லலாம்
ஒன்பதாம் திருமுறையில் கரூர் தேவர் இடம் பெறுகிறார்
.மேலும் சித்தர் பட்டினத்தார் இடம் பெறுகிறார் .திருமூலர் மூவருக்கும் முந்தியவராக இருந்தும் அவர் நால்வரின் படைப்புக்கு பின்பே இடம் பெறுகிறது
கிமு 3 ஆ நூற்றாண்டு வாக்கிலே தொகுக்கப்பட்ட சங்கப்பாடல்களில் துவள்ளுவர் திருக்குறள் சேர்க்கப்பட்டுள்ளது .அவரும் ஒரு சித்தரென்று நிறுவும் பல சான்றுகளை பின்னர் கூறுகிறேன்

.ஆக சித்தர்களின் பெயர்கள் தொடர்ந்து நமது தமிழ் மொழியில் இடம் பெற்றுள்ளன சித்தர்களின் பெயர்களும் மக்களிடையே அதிகம் அறியப்பட்டிருந்திருக்கிறது

இலக்கியங்களிலே இடம் பெற்று வருவதால் அவர்களின் கால தொன்மையை அறிய முடிகிறது .

தமிழ் மரபில் சித்தர்கள் எனப்படும் குழுவினர் பல காலமாக இருக்கின்றனர். ‘சித்துக்கள் கைவரப்பெற்றவர் சித்தர்’ என்று பொருள்கொள்ளப்படுகிறது.
ஆனால் அதுமட்டும்தான் பொருள் என்று
பொருளின் வியாபகத்தை ஒடுக்கிவிடக்கூடாது.
aAந்தக்கரணமான மனம் புத்தி சித்தி அகங்காரம் இவைகளில் சித்தம் தெLI ந்தவர்கள் சித்தர்கள் என்பொருமுண்டு

திருவிளையாடல் புராணம் என்றொரு புராணம் இருக்கிறது. மதுரையம்பதியில் சொக்கேசப்பெருமான் நிகழ்த்திய அறுபத்துநான்கு திருவிளையாடல்களைக் கூறும் புராணம். இயற்றியவர் பரஞ்சோதி முனிவர்.
பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணத்தில் பல படலங்கள் இருக்கின்றன.
அவற்றில் சொக்கேசப்பெருமான் சித்தராக
வந்து சித்துவிளையாடிய படலங்கள் சில இருக்கின்றன அவற்றில் ,

எல்லாம் வல்ல சித்தரான படலம்
அஷ்டமாசித்து உபதேசித்த படலம்
கல்லானைக்குக் கரும்பருத்திய படலம்

நரியைப் பரியாக்கியது, பரியை நரியாக்கியது, வைகையில் வெள்ளம் வரச்செய்தது, வெள்ளத்தை அடக்கியது, ரஸவாதம் செய்தது போன்றவையும் சித்துக்கள்தாம். சித்திகளைப் பற்றி ஏராளமான விபரங்களைப் பெரும் பெரும் சித்தர்கள் எழுதியுள்ளார்கள்.

தாயுமானவரின் மிகப் பிரபலமான தேஜோமயானந்தப் பத்து’ பாடல்களில் ஒன்றாகிய ‘கந்துக மதக் கரி’ பாடலில் ஒரு பட்டியலைக் காணலாம்.

“கந்து உக மதக்கா¢யை வசமா நடத்தலாம்;
கரடி,வெம்புலி வாயையும்
கட்டலாம்; ஒரு சிங்கம் முதுகின்மேல் கொள்ளலாம்;
கட்செவி எடுத்து ஆட்டலாம்;
வெந்தழலின் இரதம் வைத்து ஐந்துலோகத்தையும்
வேதித்து விற்று உண்ணலாம்;
வேறொருவர் காணாமல் உலகத்து உலாவலாம்;
விண்ணவரை ஏவல் கொள்ளலாம்;
சந்ததமும் இளமையோடு இருக்கலாம்; மற்று ஒரு
சா£ரத்திலும் புகுதலாம்;
ஜலம்மேல் நடக்கலாம்; கனல்மேல் இருக்கலாம்;
தன்னிகா¢ல் சித்தி பெறலாம்;
சிந்தையை அடக்கியே “சும்மா” இருக்கின்ற
திறம் அ¡¢து! சத்து ஆகி என்
சித்தமிசை குடி கொண்ட அறிவு ஆன தெய்வமே!
தேஜோ மய ஆனந்தமே

சித்தர்கள் “சித்தர்” என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது
பொருள். இயமம், நியமம், ஆதனம்,பிராணாயாமம்,
பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு
வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை
பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார்
சித்தர்கள் பதினெட்டு என்றால் அவர்கள் பட்டியல் ஏன்
வேறுபடுகிறது?: “பதினென் சித்தர்கள்” என்ற கணக்கீடு
பிரபலமாக சித்தமருத்துவர்கள், சித்த-எழுத்தாளர்கள் மற்றும் சித்த-ஆராய்ச்சியாளர்கள் உபயோகித்து வருகிறார்கள
ஆனால், அத்தகைய கணக்கீட்டிற்கு ஆதாரம் ஏதாவது
உள்ளதா என்று பார்க்கும் போது, பல பட்டியல்கள்
தோன்றுகின்றன.
இப்படி சித்தர்கள் பட்டியல் கணக்கில்லாமல்
பெருகிக்கொண்டே செல்கிறது. ஆயினும் பதினெட்டுப் புராணங்கள்,
பதினெட்டுப் படிகள்,
பதினெண் குடிமை, பதினெண் பாஷை என்று வரையறை
செய்தது போல் சித்தர்களையும் பதினெண் சித்தர்களாக ஒரு வரையறை
செய்தனர். சங்கப்
புலவர்கள் செய்த நூல்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை,
பதினெண் கி ழ்க்கணக்கு என்று எண்ணிக்கையில் தொகுத்தது போலவே

ப்பதினெண் சித்தர் பாடல்களும் பெரிய ஞானக்கோவை என்ற நூலாகத்
தொகுத்தனர்.
ஏனைய சித்தர் பாடல்கள் அவரவர் பெயராலேயே
தொகுக்கப்பட்டன.ஜோதிடத்தில் இடம் பெரும் 27 நட்சத்திரங்கள் மட்டும் தானா வானத்தில் இருக்கின்றன .இவைகள் எப்படி ஒவ்வொரு விண்மீன் கூட்டங்களைக்குறிக்கிறதோ அப்படிதான் இந்த 18 சித்தர்களும் 18 சித்தர்கள் கூட்டத்தை குறிப்பதாகக்கொள்ளலாம்
உதாரணத்திற்கு பிரபலமாக மற்ற சித்த
எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடும் பட்டியல்கள் சில கீழே கொடுக்கப்படுகின்றன:

கருவூரார் மாந்திரீக அட்டமா சித்து நிஜானந்த
போதம் அபிதான சிந்தாமணி ஏ. சண்முகவேலன் இவைகளில் இவைகள் தொகுக்கப்பட்டுள்ளது

நந்தி யருள் பெற்ற நாதரை நாடினின்நந்திகள் நால்வர்
சிவயோக மாமுனி
மன்ற தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
என்றிவர் என்னோ டெண்மருமே
(திருமந்திரம்.68)

நந்தி
சனகர்
சனந்தர்
சனாதர்
சனற்குமாரர்
பதஞ்சலி
வியாக்ரமர்
திருமூலர்
இப்பாடலை வைத்துக் கொண்டுப் பார்த்தால் – எண்மர் என்று
வருகிறது. அவருடைய சீடர்கள் என அவரே குறிப்பிடுவது
:மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்இந்திரன் சோமன்
பிரம்மன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடிந்த எழுவரும் என்
வழியாமே
மாலாங்கன்
இந்திரன்
சோமன்
பிரம்மன்
உருத்திரன்
கந்துருக் காலாங்கி
கஞ்ச மலையன்
ஆக திருமூலர் காலத்தில் 15 பேர் உள்ளனர்
:
போகர் 7000 என்ற நூலில் தான் சித்தர்கள் பற்றிய
அதிகமான செய்திகள் உள்ளன, சித்தர்கள் “பதினெண்மர்”
என்று குறிப்பிட்டு, 40ற்கும் மேற்பட்ட சித்தர்களின் பிறந்த
மாதம், நட்சத்திரம், சாதிகளையும் குறிப்பிடுகின்றது.
போகருக்கு 63 சீடர்கள் இருந்தார்களாம்,
வடக்கே நவநாத சித்தர்கள் எனக்குறிக்கும் மரபு உள்ளது
தினெண்மர் யாவர் என்பதிலே கருத்து வேறுபாடு இருப்பது
போல நவநாத சித்தர் யாவர் என்பதிலும் கருத்து வேறுபாடு
இருந்து வருகின்றது”,
எம்.எஸ்.பூர்ணலிங்கம் பிள்ளை

சித்தர்களின் சக்திகளை தாயுமானவர் தமது “சித்தர் கணம்”
எ ன்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது

நாதசித்தர்கள் இருந்ததற்கான கல்வெட்டு
ஆதாரங்கள்: கோரக்கரை குருவாகக் கொண்ட
நாத்-சம்பிரதாயம் சரித்திர ரீதியில் 13வது நூற்றாண்டில்
காணப்படுகிறது. குஜராத்தில் ஜுனாகட் என்ற இடத்தில்
இருந்த 1287ம் ஆண்டு கல்வெட்டின்படி, கோரக்கர், லகுலீச
அல்லது பாசுபத குழுவினருன் சேர்த்துச் சொல்லப்படுகிறார்[4].
இத்தகைய ஆதாரங்களின் படி பார்க்குன் போது,
நாத்-சித்தர்கள் பாசுபத மற்றும் காபாலிகர்களின் வம்சம்
வழியாக வந்தவர்கள் என்று தெரிகிறது. ஆகையால்
அவர்களுடன் மந்திர-தந்திர-யந்திய வழிபாடு, முறைகள்
முதலியனவும் சேர்ந்து காணப்படுகின்றன.விளக்கியுள்ளாதாகக் கூறுகிறார்.

சக்தி வழிபாட்டில் சிறந்த 84-வகை சித்தர்கள்:
தாந்திரிகமுறைப் பிற்றுபவர்கள் தாம் “சித்தர்கள்” என்று
அழைக்கப்பட்டாதாக, வங்காளத்தில் அறியப்படுகிறது.
வடகிழக்கு பகுதியில் தான் சக்தி வழிபாடு அதிகமாகக்
காணப்படுகிறது. காமாக்கியா கோவில் அதன் மையமாக
உள்ளது. சதியின் உடற்கூறுகள் விழுந்த ஒவ்வொரு இடமும்
சக்திபீடமாக இருந்து, வழிபாடு நடைப்பெற்று வருகிறது.
வங்காள பாரம்பரியத்தின்படி, 84-சித்தர்களான அவர்கள்
படிப்பறிவில்லாதவர்களாக, நகர்புறங்களில், கிராமங்களில்
அலைந்து திரிந்து கொண்டிருந்தனர்[5]. இவர்கள்
சக்திவழிபாட்டு முறையைக் கொண்டிருந்தனர்.
தந்திரம்-மந்திரம்-யந்திரம் என்ற ரீதியில், எலும்பு,
மண்டையோடு முதலியவற்றுடன் இருப்பர். மண்டையோட்டில்
பிச்சையேற்று உண்டு வந்தனர்.

 

ஒருகோடி சித்தருண்டு அவர்கள் பெயரை

ஓகோகோ எழுதிடவே அடங்காதையா

— சச்சிதானந்த சுழுமுனை சூத்திரம் 23
தொடரும் …..
                                                                                                                             அண்ணாமலைசுகுமாரன்

Comment here