Uncategorizedஅரசியல்இந்தியாஉலகம்பொது

உலகின் மிகப் பெரிய சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அக். 31ம் தேதி திறப்பு

Rate this post

உலகின் மிகப் பெரிய சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை குஜராத் மாநிலத்தில் அக்டோபர் மாதம் 31ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு அப்போதைய முதல் உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் பட்டேல். இந்தியாவில் பிரிந்து கிடந்த 600க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கினார். இதனால், சர்தார் வல்லவாய் பட்டேலுக்கு சிலை வைக்க பலர் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், குஜராத் மாநிலத்தின் முதல் மந்திரியாக நரேந்திர மோடி பதவிவகித்த போது சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில் 182 மீட்டர் உயரத்தில் உலகிலேயே மிகப்பெரிய ஒரு சிலையை உருவாக்க கடந்த 2013-ம் ஆண்டில் அடிக்கல் நாட்டினார். 2,603 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்த சிலையை அமைப்பதற்காக இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து மண், இரும்பு உள்ளிட்ட பொருட்கள் கொண்டு கட்டப்பட்டு வந்தன. இந்த நிலையில், ஒருமைப்பாட்டுச் சிலை என பெயரிடப்பட்டுள்ள வல்லபாய் பட்டேலின் இந்தச் சிலையை வரும் அக்டோபர் மாதம் 31-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

Comment here