பொது

உலகில் 2-வது முறையாக ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் பிறந்தன

Rate this post
கிழக்கு ஈராக்கின் தியாலி மாகாணத்தில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் சமீபத்தில் நடந்த பிரசவம் பலருக்கு ஆச்சரியமான செய்தியாக அமைந்துள்ளது. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட 25 வயது பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 6 ஆண், 1 பெண் என்று 7 குழந்தைகள் பிறந்துள்ளன. அனைத்து குழந்தைகளும் நலமாக உள்ளன.
பிரசவமான பெண்ணுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தற்போது எங்களுக்கு மொத்தம் 10 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரையும் ஒரே சமயத்தில் கவனித்துக் கொள்ள வேண்டும். இதனால் இனியும் குழந்தை பெறும் எண்ணம் இல்லை என்று குழந்தைகளின் தந்தை தெரிவித்துள்ளார்.
ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் என்பது உலகில் இது இரண்டாவது முறையாகும். உலகில் முதல் முறையாக 1997ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் பிறந்தனர்.

Comment here