உலகம்

உலகைச்சுற்றி…

  • ‘விக்கிலீக்ஸ்’ நிறுவனத்தின் தலைவரான ஜூலியன் அசாஞ்சே மீது, கடந்த 2010–ம் ஆண்டு சுவீடனில் கற்பழிப்பு வழக்கு தொடரப்பட்டது. தற்போது, அவர் இங்கிலாந்தில் ஜாமீன் நிபந்தனையை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் மீதான கற்பழிப்பு வழக்கின் விசாரணையை மீண்டும் தொடங்க இருப்பதாக சுவீடன் அரசு வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.

  • மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான பனாமா நாட்டின் பியூர்டோ மேடூலஸ் நகரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் 17 வயது சிறுமி உள்பட 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

  • மங்கோலியா நாட்டின் உம்னுகோவி மாகாணத்தில் பயங்கர பனிப்புயல் தாக்கியது. பனிப்புயலில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

  • ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லிதுவேனியாவில் 2 கட்டங்களாக அதிபர் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் நாட்டின் பிரதமரான சவுலியஸ் ஸ்க்வெர்னலிசும் அதிபர் வேட்பாளராக களம் இறங்கினார். ஆனால் முதல் கட்ட தேர்தலில் அவர் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். இதனால் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.

Comment here