பிரத்யகம்

உலகை உருவாக்கிய ஒலியும் ,ஒளியும்

 

நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
— என்ற திருப்புகழை அநேகமாக அனைவரும் கேட்டிருப்போம்
இது நாதமும் , பி ந்துவுமான ஆகிய
தத்துவங்களுக்கான மூலப்பொருளை போற்றி, எனப்பொருள்படும் . இவை சிவசக்தி உருவாகும்

இதிலே நாதம் துன்பது சிவ ஸ்வரூபம்,
பிந்துஎன்பது சக்தி ஸ்வரூபம், எனக் கொள்ளப்படும்
அது எங்கனம் என்று விரிவாக பார்ப்போம்

அனைத்துவித சப்தத்துக்கு மூலம் நாதம்,
அனைத்து வித ரூபங்களுக்கு மூலம் பிந்து
அதாவது ஒலி, ஒளி என்பதில் ஒலிக்கு மூலம் நாதம், ஒளிக்கு மூலம் பிந்து என்பது ஆகும்
உலகின் அனைத்து வித ரூபங்களுக்கும் , சப்த்தத்திற்கும்
ஆதாரம் இந்த நாத விந்து ஆகும்
நாதம், சப்தம் என்கிறவற்றுக்கிடையே வேறுபாடுண்டு
சப்தம் என்பது வெளியிலேஇருந்து வருகிற ஒலிகள் அவற்றிலே பல விதங்கள் உண்டு.
நாதம் என்பது எந்த சப்தமானாலும் அதற்கு ஆதாரமாயிருப்பது
நமது மறைகள் சப்தம் நித்யமானது, பூர்ணமானது என்று அதன் இரண்டு குணங்களை சொல்லியிருக்கிறது.
நேரம் (Time) என்கிற காலத்துக்குக் கட்டுப்படாமல் இருப்பதுதான் ‘நித்யம்
வெளி (Space ) என்னும் இடக் கட்டுப்பாடு இல்லாமல் எங்கும் பரவியிருப்பதுதான் ‘பூர்ணம்’.
இப்படி எக்காலத்திலும் எவ்விடத்திலுமாக நிறைந்திருப்பது சப்தம் என்று நம் முன்னோர்கள் சொன்னதை இப்போதுதான் விஞ்ஞானம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது

இறையை நாதம் என்கின்ற சிவம் அல்லது அப்பன் என்ற ஆண் வடிவும் பிந்து என்கின்ற சக்தி அல்லது தாய் என்ற பெண்வடிவும் இணைந்த ஒருமித்த அம்மையப்பர் வடிவில் எப்பொழுதும்,எங்கும் காணும் தரிசனம் தான் சைவத்தின் சிறப்பு
புறஉலகான இந்த சடவுலகில் நாதம், பிந்து என்னும் சட தத்துவங்கள் இந்த உயிர்ப்பான அம்மையும் அப்பனும் தொழிற்படும் சடமான தளங்களாம்

இயல்பாகவே அநாதியாகவே நாத பிந்து சமநிலையில் உள்ளது அது ஆணுமிலி, பெண்ணுமிலி, அலியுமிலியான பொருள் இறை ஒன்றே.
இதையே சைவர்கள் ஆண் பாதி,பெண் பாதியான அர்த்த நாரீசுவர வடிவில் காண்கின்றனர்

ஆனால் இயல்பாகவே இச்சமநிலையில் இல்லாத உயிரினங்கள் ஒவ்வொன்றும் தம்மில் உள்ள இந்த நாதம்,பிந்து உந்தல்களின் அகச்சமநிலையை நாடிப் புறத்தே பாலியல் நாட்டத்தை வெளிப்படுத்துகின்றார்கள்.

இது மிகச்சிறிய கண்ணுக்குத் தெரியாத பாக்டரியா போன்ற நுண்ணுயிர்களில் இருந்து மனிதர் போன்ற சிக்கலான உயிரினங்கள் வரை பொருந்துகின்ற ஒன்று ஆகும்

இந்த நாதம் பிந்து என்னும் சிவ சக்தி தத்துவங்களினூடான தொழிற்பாடே உயிரற்ற சடப்பொருட்களையாக்கும் நுண்னிய அணுக்களிலும் உள்ள பாசிட்டிவ் நேரேற்றம் உள்ள ப்ரோட்டான்களிலும் மற்றும் எதிரேற்றம் உள்ள எலட்ரோன்களிலும் அகச்சமநிலை நாடிய கவர்ச்சியையும் அசைவையும் விளக்கும் அண்டப்பேரறிவியல்.

அணுச்சக்தி,ஒளி,ஒலி,மின்சாரம்,மின்காந்தம்,ஈர்ப்பு,காந்த போன்ற சடசக்தி வடிவங்களும் கூட அகச்சமநிலை நாடி நேர் எதிர் முனைகளாகத் தொழிற்படுவதை விளக்கும் அண்டப்பேரறிவியல் இதுவே.
இதன் காரணமாக அண்டங்களின் இருப்பும், சுழற்சியும், இயக்கமும் முடிவில் ஒடுக்கமும், மீண்டும் தோற்றமும் நடந்தேறுகின்றது.
இதுதான் இந்தப் பேரண்டத்தின் அசைவு அல்லது சுழற்சி.

இதற்குப் பின்னால் ஒரு பேரறிவு இருப்பதனால் இது எந்த விதமான குழப்பமும் இல்லாமல் நடந்தேறுகின்றது.
அண்டப்பேரறிவியல்;இதுவே ஆண் என்றும் பெண் என்றும் சகல உயிரினங்களும் வகைப்படுத்தப்பட்டிருப்பதைக்
காட்டும் அண்டப்பேரறிவியல்;
இதுவே முழுமையான அண்டப்பேரறிவியலின் வடிவு. இந்தப் பேரண்டஅறிவியலின் தரிசனத்தைத்தான்அப்பர் சுவாமிகள்“….கண்டறியாதன கண்டேன்”என்றுதிருவையாற்றுப் பதிகத்தில்பாடுகின்றார்.

“காதல் மடப்பிடி யோடும் களிறு வருவன கண்டேன்…”
“கோழிபெடை யொடும் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்…”
“வரிக்குயில் பேடையொடு ஆடி வைகி வருவன கண்டேன்…”
“சிறையிளம் பேடையொடு ஆடிச் சேவல் வருவன கண்டேன்…”
“பேடை மயிலொடும் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்…”
“வண்ணப் பகன்றிலொடு ஆடி வைகி வருவன கண்டேன்…”
“இடுகுரல் அன்னதோர் ஏனம் இசைந்து வருவன கண்டேன்…”
“கருங்கலை பேடையொடு ஆடிக் கலந்து வருவன கண்டேன்…”
“நற்றுணைப் பேடையொடு ஆடி நாரை வருவன கண்டேன்…”
“பைங்கிளி பேடையொடு ஆடிப் பறந்து வருவன கண்டேன்…”
“இளமண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்…”

இந்த எதிர்முனைப்பட்ட உந்தல்கள் எப்போதும் அகச்சமநிலையை அடைவதற்கான ஓட்டத்தில்,ஆட்டத்தில் அல்லது அசைவில் உள்ளன.
இடைவிடாது தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கும் இந்த ஆட்டமே,அசைவே அணுவிலும்காணப்படுகின்றது;

இதுவே அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்தில் உள்ளது என் தமிழர் சொல்லில் நெடுங்காலமாக நிலவிவரும் ஒரு சொல்வடையாகும்
அண்டத்திலும் காணப்படுகின்ற உயிர் வாழ்வனவும் இந்த ஆட்டத்தில்தான்;
உயிரற்றன்வும் இந்த எதிர்முனைப்பட்ட உந்தல்கள் எப்போதும் அகச்சமநிலையை அடைவதற்கான ஓட்டத்தில்,ஆட்டத்தில் அல்லது அசைவில் உள்ளன.
இந்த ஆட்டமே,அசைவே அணுவிலும் காணப்படுகின்றது;
அண்டத்திலும் காணப்படுகின்றது;
உயிர் வாழ்வனவும் இந்த ஆட்டத்தில்தான்;
உயிரற்ற சடப்பொருட்கள் கூட இந்த ஆட்டம்தான்.

அணுச்சக்தி, காந்த சக்தி, மின்னியற் சக்திகளும் கூட இந்த ஆட்டத்தின் படியே ஆடுகின்றன.
நுண்ணுயிர்களிலும் எளிமையான உயிர் உள்ளதோ,அற்றதோ என்ற இரண்டுக்கும் இடைப்பட்ட நியூக்கிளிக்கமில உயிரக வடிவங்களிலும் இந்த ஆட்டமே.

அவன்,அவள்,அது என்று மூவகைப்பட்டு நிற்கும் இந்த அண்டப்பேரண்டம் முழுமையிலும் நின்று இயங்குவதும்,இயங்குவதும் இந்த ஆட்டமே.
இந்த ஆட்டத்தை உணர்ந்து தெளிதலே சிதம்பர தரிசனம்.
அந்த ஆட்டமே நடராஜரின் புற உருவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது .
நடராஜரின் இரு கரங்களில் , ஒன்றில் நாதம் எனும் ஒலி யைக்குறிக்கும் உடுக்கையும் , ( டமருகம் ) , மற்றத்தில் பிந்து எனும் ஒளியைக்குறிக்கும் தீச்சட்டியையும் ஏந்தி ஆட்டம் ஆடுகிறார் .அந்த ஆட்டம் இருக்கும் வரை பிரபஞ்சமும் நிலைத்திருக்கும் .

எத்தனை அறிவியல் பூர்வமாக தமிழர் சமயம் அமைக்கப்பட்டிருக்கிறது என்பது நம்மை வியப்படையச் செயகிறது .
அண்ணாமலை சுகுமாரன்

Comment here