உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் முன்நிலையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றிய உறுதிமொழி ஏற்று சமபந்தி விருந்து நடைபெற்றது.

5 (100%) 1 vote

 

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர்  முன்னிலையில்எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றிய உறுதிமொழி ஏற்று சமபந்தி விருந்து நடைபெற்றது. .

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் நாள் உலக எய்ட்ஸ் தினமாக அனுசரித்துவருகின்றனர் இநிலையில் கடலூரில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அமைப்பு சார்பாக உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் உறுதிமொழி ஏற்பு விழா கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே கலந்து கொண்டு HIV மற்றும் எய்ட்ஸ் குறித்து முழுமையாக அறிந்திடுவோம், அறிந்ததை என் குடும்பத்தினர்களுக்கும் தெரியபடுதுவோம், HIV மற்றும் எய்ட்ஸ் இல்லாத சமுகத்தை உருவாக்கிடுவோம் போன்ற எய்ட்ஸ் குறித்த பல்வேறு உறுதிமொழிகளை ஏற்று எய்ட்ஸ் – ஆள் பதிக்கப்பட்ட ஆதரவற்ற உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு காசோலையும், பொங்கல் பரிசாக புத்தாடை மற்றும் மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது. மேலும் எய்ட்ஸ் ஆள் பாதிக்கப்பட்டு குழந்தைகள் காலம் தவறாமல் மருந்துகளை எடுத்து வருபவர்களுக்கு சான்றிதழ்களும் அதிக எண்ணிகையில் HIV தொற்றுவுள்ள கருவுற்ற தாய்மார்களுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்களுக்கும், சிறப்பாக பணியாற்றிய RNTCP STS-க்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இறுதியில் சமபந்தி விருந்து அளிக்கப்பட்டது இதில் மாவட்ட ஆட்சியர் பிரசாத்.மு.வடநேரே அனைவர்களுடன் அமர்ந்து உணவு உண்டு மகிழ்ந்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*