இந்தியாஉலகம்தமிழகம்பொதுவிளையாட்டு

உலக கேரம் போட்டி : சென்னை வண்ணாரப்பேட்டை வீரர் 2 வெள்ளிப் பதக்கம்

தென்கொரியாவில் உள்ள சியோல் நகரில் நடைபெற்ற கேரம் போட்டியில் சென்னை, வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சகாயபாரதி 2 வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

உலகக் கோப்பை கேரம் போட்டி தென்கொரியாவில் உள்ள சியோல் நகரில் நடைபெற்றது. இதில், கேரம் போட்டியில் சிறந்த வீரர்கள் பலர் பங்கெடுத்தனர். இப்போட்டியில், சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 38 வயதான சகாயபாரதி, அணிகள் பிரிவிலும், ஓபன் டபுள்ஸ் பிரிவிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்தத் தொடரில் இந்திய அணியில் தமிழகத்தில் இருந்து சகாயபாரதி மட்டுமே தேர்வாகி, இடம் பெற்றிருந்தார். இதனால், இந்திய அளவில் தர வரிசை பட்டியலில் சகாயபாரதி 4வது இடத்தில் உள்ளார். ஓபன் டபுள்ஸ் இறுதிப் போட்டியில் சகாயபாரதி, ஜாகீர் பாஷா ஜோடி சகநாட்டைச் சேர்ந்த ரியாஸ் அக்பர் அலி, பிரசாந்த் மோரே ஜோடியிடம் 25-4, 5-25, 13-25 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. அணிகள் பிரிவில் சகாய பாரதி, பிரசாந்த் மோரே, ஜாகீர் பாஷா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி இறுதிப் போட்டியில் 1-2 என்ற கணக்கில் இலங்கையிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது.

Comment here