விளையாட்டு

உலக கோப்பை அரையிறுதி : ரோகித் சர்மா உருக்கம்

இந்த உலகக் கோப்பை தொடரில் 5 சதங்கள் உட்பட 648 ரன்கள் குவித்து இதுவரை முதலிடத்தில் உள்ள ரோகித் சர்மா, நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும் சதம் அடிப்பார் என அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்தனர். ஆனால் எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்நிலையில், அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்து துணைக் கேப்டன் ரோகித் சர்மா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அதில், ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக விளையாட தவறிவிட்டோம். முதல் 30 நிமிட மோசமான ஆட்டம், உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை பறித்துவிட்டது. என்னுடைய இதயம் கனமாக உள்ளது. உங்களுடைய இதயமும் அப்படிதான் இருக்கும் என நம்புகிறேன். தாய்நாட்டை கடந்து எங்களுக்கு அளவுகடந்த ஆதரவு கிடைத்தது பெருமிதமாக இருந்தது. நாங்கள் விளையாடும் இடமெல்லாம் ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி என ரோகித் சர்மா உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்பாக, கேப்டன் விராட் கோலியும் 45 நிமிட மோசமான ஆட்டமே தோல்விக்கு காரணம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comment here